குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௪
Qur'an Surah Al-An'am Verse 104
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَدْ جَاۤءَكُمْ بَصَاۤىِٕرُ مِنْ رَّبِّكُمْۚ فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖۚ وَمَنْ عَمِيَ فَعَلَيْهَاۗ وَمَآ اَنَا۠ عَلَيْكُمْ بِحَفِيْظٍ (الأنعام : ٦)
- qad
- قَدْ
- Verily
- வந்துவிட்டன
- jāakum
- جَآءَكُم
- has come to you
- உங்களுக்கு
- baṣāiru
- بَصَآئِرُ
- enlightenment
- ஆதாரங்கள்
- min
- مِن
- from
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْۖ
- your Lord
- உங்கள் இறைவன்
- faman
- فَمَنْ
- Then whoever
- எனவே எவர்
- abṣara
- أَبْصَرَ
- sees
- பார்த்தாரோ
- falinafsihi
- فَلِنَفْسِهِۦۖ
- then (it is) for his soul
- அவருக்குத்தான் நன்மை
- waman
- وَمَنْ
- and whoever
- இன்னும் எவர்
- ʿamiya
- عَمِىَ
- (is) blind
- குருடாகி விட்டாரோ
- faʿalayhā
- فَعَلَيْهَاۚ
- then (it is) against himself
- அவருக்குத்தான் கேடாகும்
- wamā anā
- وَمَآ أَنَا۠
- And not (am) I
- நான் இல்லை
- ʿalaykum
- عَلَيْكُم
- over you
- உங்கள் மீது
- biḥafīẓin
- بِحَفِيظٍ
- a guardian
- காவலனாக
Transliteration:
Qad jaaa'akum basaaa'iru mir Rabbikum faman absara falinafsihee wa man 'amiya fa'alaihaa; wa maaa ana 'alaikum bihafeez(QS. al-ʾAnʿām:104)
English Sahih International:
There has come to you enlightenment from your Lord. So whoever will see does so for [the benefit of] his soul, and whoever is blind [does harm] against it. And [say], "I am not a guardian over you." (QS. Al-An'am, Ayah ௧௦௪)
Abdul Hameed Baqavi:
உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கின்றானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கின்றானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நான் உங்களைக் காப்பவன் அல்ல" (என்று கூறுங்கள்). (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௪)
Jan Trust Foundation
நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் உங்களுக்கு வந்துவிட்டன. எவர் (அவற்றைப்) பார்த்தாரோ அது அவருக்குத்தான் நன்மை. எவர் குருடாகிவிட்டாரோ (அது) அவருக்குத்தான் கேடாகும். (நீர் அவர்களை நோக்கி) "நான் உங்கள் மீது (ஏற்படுத்தப்பட்ட) காவலனாக இல்லை" (என்று நபியே! கூறுவீராக).