குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௬
Qur'an Surah Al-Ma'idah Verse 96
ஸூரத்துல் மாயிதா [௫]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّيَّارَةِ ۚوَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ۗوَاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ (المائدة : ٥)
- uḥilla
- أُحِلَّ
- Is made lawful
- அனுமதிக்கப்பட்டுள்ளது
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- ṣaydu
- صَيْدُ
- game
- வேட்டையாடுவது
- l-baḥri
- ٱلْبَحْرِ
- (of) the sea
- கடலில்
- waṭaʿāmuhu
- وَطَعَامُهُۥ
- and its food
- இன்னும் அதை புசிப்பது
- matāʿan
- مَتَٰعًا
- (as) provision
- பயனளிப்பதற்காக
- lakum
- لَّكُمْ
- for you
- உங்களுக்கு
- walilssayyārati
- وَلِلسَّيَّارَةِۖ
- and for the travelers
- இன்னும் பயணிகளுக்கு
- waḥurrima
- وَحُرِّمَ
- and is made unlawful
- விலக்கப்பட்டுள்ளது
- ʿalaykum
- عَلَيْكُمْ
- on you
- உங்களுக்கு
- ṣaydu
- صَيْدُ
- game
- வேட்டையாடுவது
- l-bari
- ٱلْبَرِّ
- (of) the land
- தரையில்
- mā dum'tum
- مَا دُمْتُمْ
- as long as you
- இருக்கும்போதெல்லாம்
- ḥuruman
- حُرُمًاۗ
- (are) in Ihram
- இஹ்ராமுடைய வர்களாக
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- And be conscious
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- (of) Allah
- அல்லாஹ்வை
- alladhī
- ٱلَّذِىٓ
- the One
- எவன்
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவன் பக்கம்
- tuḥ'sharūna
- تُحْشَرُونَ
- you will be gathered
- நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
Transliteration:
Uhilla lakum saidul bahri wa ta'aamuhoo mataa'al lakum wa lissaiyaarati wa hurrima 'alaikum saidul barri maa dumtum hurumaa; wattaqul laahal lazeee ilaihi tuhsharoon(QS. al-Māʾidah:96)
English Sahih International:
Lawful to you is game from the sea and its food as provision for you and the travelers, but forbidden to you is game from the land as long as you are in the state of ihram. And fear Allah to whom you will be gathered. (QS. Al-Ma'idah, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதனை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௯௬)
Jan Trust Foundation
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனளிப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவன் பக்கமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.