Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௫

Qur'an Surah Al-Ma'idah Verse 95

ஸூரத்துல் மாயிதா [௫]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْتُمْ حُرُمٌ ۗوَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَۤاءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ۗعَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ۗوَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ۗوَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
lā taqtulū
لَا تَقْتُلُوا۟
(Do) not kill
கொல்லாதீர்கள்
l-ṣayda
ٱلصَّيْدَ
the game
வேட்டையை
wa-antum
وَأَنتُمْ
while you
நீங்கள்
ḥurumun
حُرُمٌۚ
(are in) Ihram
இஹ்ராமுடையவர்கள்
waman
وَمَن
And whoever
எவர்
qatalahu
قَتَلَهُۥ
killed it
கொன்றார்/அதை
minkum
مِنكُم
among you
உங்களில்
mutaʿammidan
مُّتَعَمِّدًا
intentionally
வேண்டுமென்றே (நாடியவராக)
fajazāon
فَجَزَآءٌ
then penalty
தண்டனை
mith'lu
مِّثْلُ
(is) similar
ஒப்பானது
mā qatala
مَا قَتَلَ
(to) what he killed
எது/கொன்றார்
mina l-naʿami
مِنَ ٱلنَّعَمِ
of the cattle
இருந்து/கால்நடைகள்
yaḥkumu
يَحْكُمُ
judging
தீர்ப்பளிப்பர்
bihi
بِهِۦ
it
அதற்கு
dhawā ʿadlin
ذَوَا عَدْلٍ
two men just
நேர்மையான இருவர்
minkum
مِّنكُمْ
among you
உங்களில்
hadyan
هَدْيًۢا
(as) an offering
பலியாக
bāligha
بَٰلِغَ
reaching
அடையக் கூடியது
l-kaʿbati
ٱلْكَعْبَةِ
the Kabah
கஅபா
aw
أَوْ
or
அல்லது
kaffāratun
كَفَّٰرَةٌ
an expiation
பரிகாரம்
ṭaʿāmu
طَعَامُ
feeding
உணவளிப்பது
masākīna
مَسَٰكِينَ
needy people
ஏழைகள்
aw
أَوْ
or
அல்லது
ʿadlu
عَدْلُ
equivalent
சமமானது
dhālika
ذَٰلِكَ
(of) that
அது
ṣiyāman
صِيَامًا
(in) fasting
நோன்பால்
liyadhūqa
لِّيَذُوقَ
that he may taste
அவன் அனுபவிப்பதற்காக
wabāla
وَبَالَ
(the) consequence
கெட்ட முடிவை
amrihi
أَمْرِهِۦۗ
(of) his deed
செயல்/தனது
ʿafā
عَفَا
Pardoned
மன்னித்தான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
ʿammā salafa
عَمَّا سَلَفَۚ
what (has) passed
முன் நடந்தவற்றை
waman
وَمَنْ
but whoever
எவன்
ʿāda
عَادَ
returned
மீண்டான்
fayantaqimu
فَيَنتَقِمُ
then will take retribution
தண்டிப்பான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
min'hu
مِنْهُۗ
from him
அவனை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
dhū intiqāmin
ذُو ٱنتِقَامٍ
Owner (of) Retribution
தண்டிப்பவன்

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo laa taqtuslus saida wa antum hurum; wa man qatalahoo minkum mut'am midan fajazaaa'um mislu maa qatala minanna'ami yahkumu bihee zawaa 'adlim minkum hadyam baalighal Ka'bati aw kaffaaratun ta'aamu masaakeena aw 'adlu zaalika Siyaamal liyazooqa wabaala amrih; 'afal laahu 'ammaa salaf; wa man 'aada fayanta qimul laahu minh; wallaahu 'azeezun zuntiqaam (QS. al-Māʾidah:95)

English Sahih International:

O you who have believed, do not kill game while you are in the state of ihram. And whoever of you kills it intentionally – the penalty is an equivalent from sacrificial animals to what he killed, as judged by two just men among you as an offering [to Allah] delivered to the Ka’bah, or an expiation: the feeding of needy people or the equivalent of that in fasting, that he may taste the consequence of his matter [i.e., deed]. Allah has pardoned what is past; but whoever returns [to violation], then Allah will take retribution from him. And Allah is Exalted in Might and Owner of Retribution. (QS. Al-Ma'idah, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதனை வேண்டுமென்றே கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவைகளில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடுகொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதனைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவைகளை அல்லாஹ் மன்னித்துவிட்டான். (இத்தகைய குற்றம் செய்ய) எவரேனும் பின்னும் மீண்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௯௫)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது வேட்டை(ப் பிராணி)களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவர் அதை வேண்டுமென்றே கொன்றாரோ (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் தான் கொன்றதற்கு ஒப்பான(தை பரிகாரமாக கொடுப்பதுதான் அவர)து தண்டனையாகும். உங்களில் நேர்மையான இருவர் அதற்கு தீர்ப்பளிப்பர். கஅபாவை அடைகிற பலியாக (அது இருக்கவேண்டும்). அல்லது (அதன் மதிப்பின் அளவிற்கு) ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது (உணவளிக்க வசதியில்லாதவன்) நோன்பால் அதற்குச் சமமானது (நோற்க வேண்டும்). இது அவன் தன் செயலின் கெட்ட முடிவை அனுபவிப்பதற்காக ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். எவர் (குற்றத்தின் பக்கம்) மீண்டாரோ அல்லாஹ் அவரை தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.