குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௦
Qur'an Surah Al-Ma'idah Verse 90
ஸூரத்துல் மாயிதா [௫]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ (المائدة : ٥)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe!
- நம்பிக்கையாளர்களே!
- innamā l-khamru
- إِنَّمَا ٱلْخَمْرُ
- Verily the intoxicants
- நிச்சயமாக மது
- wal-maysiru
- وَٱلْمَيْسِرُ
- and [the] games of chance
- இன்னும் சூது
- wal-anṣābu
- وَٱلْأَنصَابُ
- and (sacrifices at) altars
- இன்னும் சிலைகள்
- wal-azlāmu
- وَٱلْأَزْلَٰمُ
- and divining arrows
- இன்னும் அம்புகள்
- rij'sun
- رِجْسٌ
- (are an) abomination
- அருவருக்கத்தக்கவை
- min ʿamali
- مِّنْ عَمَلِ
- from (the) work
- செயல்களில்
- l-shayṭāni
- ٱلشَّيْطَٰنِ
- (of) the Shaitaan
- ஷைத்தானின்
- fa-ij'tanibūhu
- فَٱجْتَنِبُوهُ
- so avoid it
- ஆகவே, விட்டு விலகுங்கள்/இவற்றை
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- so that you may (be) successful
- நீங்கள் வெற்றி பெறுவதற்காக
Transliteration:
yaaa aiyuhal lazeena aamanooo innamal khamru walmaisiru wal ansaabu wal azlaamu rijsum min 'amalish shaitaani fajtaniboohu la'al lakum tuflihoon(QS. al-Māʾidah:90)
English Sahih International:
O you who have believed, indeed, intoxicants, gambling, [sacrificing on] stone alters [to other than Allah], and divining arrows are but defilement from the work of Satan, so avoid it that you may be successful. (QS. Al-Ma'idah, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௯௦)
Jan Trust Foundation
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூது, சிலைகள், (ஜோசிய) அம்புகள் ஷைத்தானுடைய செயல்களில் உள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே, நீங்கள் வெற்றி பெறுவதற்காக இவற்றை விட்டு விலகுங்கள்.