Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௫

Qur'an Surah Al-Ma'idah Verse 85

ஸூரத்துல் மாயிதா [௫]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ وَذٰلِكَ جَزَاۤءُ الْمُحْسِنِيْنَ (المائدة : ٥)

fa-athābahumu
فَأَثَٰبَهُمُ
So rewarded them
ஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bimā
بِمَا
for what
எதன் காரணமாக
qālū
قَالُوا۟
they said
கூறினார்கள்
jannātin
جَنَّٰتٍ
(with) Gardens
சொர்க்கங்களை
tajrī
تَجْرِى
flows
ஓடுகிறது
min
مِن
from
இருந்து
taḥtihā
تَحْتِهَا
underneath them
அதன் கீழே
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
will abide forever
நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
in it
அதில்
wadhālika
وَذَٰلِكَ
And that
இது
jazāu
جَزَآءُ
(is the) reward
கூலி
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
(of) the good-doers
நல்லறம்புரிபவர்களுடைய

Transliteration:

Fa asaabahumul laahu bimaa qaaloo Jannnaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa; wa zaalika jazaaa'ul muhsineen (QS. al-Māʾidah:85)

English Sahih International:

So Allah rewarded them for what they said with gardens [in Paradise] beneath which rivers flow, wherein they abide eternally. And that is the reward of doers of good. (QS. Al-Ma'idah, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவைகளில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். இதுவே நன்மை செய்பவர் களுக்குரிய கூலியாகும். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮௫)

Jan Trust Foundation

அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்கள் கூறியதன் காரணமாக, அதன்கீழ் நதிகள் ஓடுகிற சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இது நல்லறம்புரிபவர்களுடைய கூலியாகும்.