Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௧

Qur'an Surah Al-Ma'idah Verse 81

ஸூரத்துல் மாயிதா [௫]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ كَانُوْا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِيِّ وَمَآ اُنْزِلَ اِلَيْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِيَاۤءَ وَلٰكِنَّ كَثِيْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ (المائدة : ٥)

walaw kānū
وَلَوْ كَانُوا۟
And if they had
அவர்கள் இருந்திருந்தால்
yu'minūna
يُؤْمِنُونَ
believed
நம்பிக்கை கொள்பவர்களாக
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wal-nabiyi
وَٱلنَّبِىِّ
and the Prophet
இன்னும் நபியை
wamā unzila
وَمَآ أُنزِلَ
and what has been revealed
எது / இறக்கப்பட்டது
ilayhi
إِلَيْهِ
to him
அவருக்கு
مَا
not
எடுத்திருக்க மாட்டார்கள்
ittakhadhūhum
ٱتَّخَذُوهُمْ
they (would have) taken them
எடுத்திருக்க மாட்டார்கள் அவர்களை
awliyāa
أَوْلِيَآءَ
(as) allies;
நண்பர்களாக
walākinna
وَلَٰكِنَّ
[and] but
என்றாலும்
kathīran
كَثِيرًا
many
அதிகமானோர்
min'hum
مِّنْهُمْ
of them
அவர்களில்
fāsiqūna
فَٰسِقُونَ
(are) defiantly disobedient
பாவிகள்

Transliteration:

Wa law kaanoo yu'minoona billaahi wan nabiyyi wa maaa unzila ilaihi attakhazoohum awliyaaa'a wa laakinna kaseeram minhum faasiqoon (QS. al-Māʾidah:81)

English Sahih International:

And if they had believed in Allah and the Prophet and in what was revealed to him, they would not have taken them as allies; but many of them are defiantly disobedient. (QS. Al-Ma'idah, Ayah ௮௧)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு அருளப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகளாகவே இருக்கின்றனர். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮௧)

Jan Trust Foundation

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.