Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮

Qur'an Surah Al-Ma'idah Verse 8

ஸூரத்துல் மாயிதா [௫]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ لِلّٰهِ شُهَدَاۤءَ بِالْقِسْطِۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَلَّا تَعْدِلُوْا ۗاِعْدِلُوْاۗ هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰىۖ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
kūnū
كُونُوا۟
Be
இருங்கள்
qawwāmīna
قَوَّٰمِينَ
steadfast
நிலைநின்றவர்களாக
lillahi
لِلَّهِ
for Allah
அல்லாஹ்வுக்காக
shuhadāa
شُهَدَآءَ
(as) witnesses
சாட்சி கூறுபவர்களாக
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۖ
in justice
நீதிக்கு
walā yajrimannakum
وَلَا يَجْرِمَنَّكُمْ
and let not prevent you
உங்களை தூண்ட வேண்டாம்
shanaānu
شَنَـَٔانُ
hatred
துவேஷம்
qawmin
قَوْمٍ
(of) a people
ஒரு சமுதாயத்தின்
ʿalā
عَلَىٰٓ
[upon]
மீது
allā taʿdilū
أَلَّا تَعْدِلُوا۟ۚ
that not you do justice
நீங்கள் நீதமாக நடக்காதிருக்க
iʿ'dilū
ٱعْدِلُوا۟
Be just
நீதமாக இருங்கள்
huwa
هُوَ
it
அது
aqrabu
أَقْرَبُ
(is) nearer
மிக நெருக்கமானது
lilttaqwā
لِلتَّقْوَىٰۖ
to [the] piety
இறையச்சத்திற்கு
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
Allah
அல்லாஹ்வை
inna
إِنَّ
indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
(is) All-Aware
ஆழ்ந்தறிந்தவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
எதை/செய்கிறீர்கள்

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamaanoo koonoo qawwaa meena lillaahi shuhadaaa'a bilqist, wa laa yajrimannakum shana aanu qawmin 'alaaa allaa ta'diloo; i'diloo; huwa aqrabu littaqwaa wattaqul laah; innal laaha khabeerum bimaa ta'maloon (QS. al-Māʾidah:8)

English Sahih International:

O you who have believed, be persistently standing firm for Allah, witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just; that is nearer to righteousness. And fear Allah; indeed, Allah is [fully] Aware of what you do. (QS. Al-Ma'idah, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮)

Jan Trust Foundation

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நிலை நின்றவர்களாக, நீதிக்கு சாட்சி கூறுபவர்களாக இருங்கள். ஒரு சமுதாயத்தின் (மீதுள்ள) துவேஷம் நீங்கள் நீதமாக நடக்காதிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதமாக இருங்கள். அது இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.