Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௫

Qur'an Surah Al-Ma'idah Verse 75

ஸூரத்துல் மாயிதா [௫]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُۗ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ ۗ كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ ۗ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَنّٰى يُؤْفَكُوْنَ (المائدة : ٥)

mā l-masīḥu
مَّا ٱلْمَسِيحُ
Not (is) the Messiah
மஸீஹ் இல்லை
ub'nu
ٱبْنُ
son
மகன்
maryama
مَرْيَمَ
(of) Maryam
மர்யமுடைய
illā
إِلَّا
but
தவிர
rasūlun
رَسُولٌ
a Messenger
ஒரு தூதரே
qad khalat
قَدْ خَلَتْ
certainly had passed
சென்றுவிட்டனர்
min qablihi
مِن قَبْلِهِ
from before him
இவருக்கு முன்னர்
l-rusulu
ٱلرُّسُلُ
the Messengers
தூதர்கள்
wa-ummuhu
وَأُمُّهُۥ
And his mother
இன்னும் அவருடைய தாய்
ṣiddīqatun
صِدِّيقَةٌۖ
(was) truthful
ஒரு மகாஉண்மையாளர்
kānā
كَانَا
They both used to
இருந்தனர்
yakulāni
يَأْكُلَانِ
eat
சாப்பிடுவார்கள்
l-ṭaʿāma
ٱلطَّعَامَۗ
[the] food
உணவு
unẓur
ٱنظُرْ
See
கவனிப்பீராக
kayfa
كَيْفَ
how
எவ்வாறு
nubayyinu
نُبَيِّنُ
We make clear
தெளிபடுத்துகிறோம்
lahumu
لَهُمُ
to them
அவர்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِ
the Signs
அத்தாட்சிகளை
thumma
ثُمَّ
then
பிறகு
unẓur
ٱنظُرْ
see
கவனிப்பீராக
annā
أَنَّىٰ
how
எவ்வாறு
yu'fakūna
يُؤْفَكُونَ
they are deluded
திருப்பப்படுகின்றனர்

Transliteration:

Mal Maseehub nu Maryama illaa Rasoolun qad khalat min qablihir Rusulu wa ummuhoo siddeeqatun kaanaa yaa kulaanit ta'aam; unzur kaifa nubaiyinu lahumul Aayaati suman zur annaa yu'fakoon (QS. al-Māʾidah:75)

English Sahih International:

The Messiah, son of Mary, was not but a messenger; [other] messengers have passed on before him. And his mother was a supporter of truth. They both used to eat food. Look how We make clear to them the signs; then look how they are deluded. (QS. Al-Ma'idah, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதனை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கின்றோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்று விட்டனர் என்பதையும் நீங்கள் கவனியுங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭௫)

Jan Trust Foundation

மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே தவிர வேறில்லை. இவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ஒரு மகா உண்மையாளர். இருவரும் உணவு சாப்பிட்டு வந்தனர். நாம் அத்தாட்சிகளை அவர்களுக்கு எவ்வாறு தெளிபடுத்துகிறோம் என்று (நபியே!) கவனிப்பீராக. பிறகு, அவர்கள் எவ்வாறு (சத்தியத்தை விட்டு) திருப்பப்படுகின்றனர் என்று(ம்) கவனிப்பீராக.