குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௩
Qur'an Surah Al-Ma'idah Verse 73
ஸூரத்துல் மாயிதா [௫]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّآ اِلٰهٌ وَّاحِدٌ ۗوَاِنْ لَّمْ يَنْتَهُوْا عَمَّا يَقُوْلُوْنَ لَيَمَسَّنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِيْمٌ (المائدة : ٥)
- laqad
- لَّقَدْ
- Certainly
- திட்டவட்டமாக
- kafara
- كَفَرَ
- disbelieved
- நிராகரித்தார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- qālū
- قَالُوٓا۟
- say
- கூறினார்கள்
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- thālithu thalāthatin
- ثَالِثُ ثَلَٰثَةٍۘ
- (is the) third (of) three"
- மூவரில் ஒருவன்
- wamā
- وَمَا
- And (there is) no
- இல்லை
- min
- مِنْ
- [of]
- இருந்து
- ilāhin
- إِلَٰهٍ
- god
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّآ
- except
- தவிர
- ilāhun
- إِلَٰهٌ
- (the) God
- ஒரு வணக்கத்திற்குரியவன்
- wāḥidun
- وَٰحِدٌۚ
- (the) One
- ஒரே
- wa-in lam yantahū
- وَإِن لَّمْ يَنتَهُوا۟
- And if not they desist
- அவர்கள் விலகவில்லையெனில்
- ʿammā yaqūlūna
- عَمَّا يَقُولُونَ
- from what they are saying
- எதிலிருந்து / கூறுகிறார்கள்
- layamassanna
- لَيَمَسَّنَّ
- surely will afflict
- நிச்சயமாக அடையும்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தார்கள்
- min'hum
- مِنْهُمْ
- among them
- அவர்களில்
- ʿadhābun
- عَذَابٌ
- a punishment
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- painful
- துன்புறுத்தக்கூடியது
Transliteration:
laqad kafaral lazeena qaalooo innal laaha saalisu salaasah; wa maa min ilaahin illaaa Ilaahunw Waahid; wa illam yantahoo 'ammaa yaqooloona layamas sannal lazeena kafaroo minhum 'azaabun aleem(QS. al-Māʾidah:73)
English Sahih International:
They have certainly disbelieved who say, "Allah is the third of three." And there is no god except one God. And if they do not desist from what they are saying, there will surely afflict the disbelievers among them a painful punishment. (QS. Al-Ma'idah, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்" என்று கூறியவர்களும் மெய்யாகவே காஃபிர்களாகி விட்டார்கள். ஏனென்றால், (ஒரே) ஒரு இறைவனைத் தவிர வேறு இறைவன் (இல்லவே) இல்லை. (ஆகவே இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭௩)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய) மூவரில் ஒருவன்தான்" என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தார்கள். ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் விலகவில்லையெனில் துன்புறுத்தும் வேதனை அவர்களில் நிராகரித்தவர்களை நிச்சயமாக அடையும்.