குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௨
Qur'an Surah Al-Ma'idah Verse 72
ஸூரத்துல் மாயிதா [௫]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ ۗوَقَالَ الْمَسِيْحُ يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّيْ وَرَبَّكُمْ ۗاِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوٰىهُ النَّارُ ۗوَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ (المائدة : ٥)
- laqad
- لَقَدْ
- Certainly
- திட்டவட்டமாக
- kafara
- كَفَرَ
- disbelieved
- நிராகரித்தார்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- qālū
- قَالُوٓا۟
- say
- கூறினார்கள்
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- huwa
- هُوَ
- He
- அவன்தான்
- l-masīḥu
- ٱلْمَسِيحُ
- (is) the Messiah
- மஸீஹ்தான்
- ub'nu
- ٱبْنُ
- son
- மகன்
- maryama
- مَرْيَمَۖ
- (of) Maryam"
- மர்யமுடைய
- waqāla
- وَقَالَ
- While said
- கூறினார்
- l-masīḥu
- ٱلْمَسِيحُ
- the Messiah
- மஸீஹ்
- yābanī is'rāīla
- يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- "O Children (of) Israel!
- இஸ்ரவேலர்களே!
- uʿ'budū
- ٱعْبُدُوا۟
- Worship
- வணங்குங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- rabbī
- رَبِّى
- my Lord
- என் இறைவன்
- warabbakum
- وَرَبَّكُمْۖ
- and your Lord"
- இன்னும் உங்கள் இறைவன்
- innahu
- إِنَّهُۥ
- Indeed, he
- நிச்சயமாக செய்தி
- man
- مَن
- who
- எவர்
- yush'rik
- يُشْرِكْ
- associates partners
- இணைவைக்கிறார்
- bil-lahi
- بِٱللَّهِ
- with Allah
- அல்லாஹ்வுக்கு
- faqad
- فَقَدْ
- then surely
- திட்டமாக
- ḥarrama
- حَرَّمَ
- (has) forbidden
- தடுத்து விடுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿalayhi
- عَلَيْهِ
- for him
- அவர் மீது
- l-janata
- ٱلْجَنَّةَ
- Paradise
- சொர்க்கத்தை
- wamawāhu
- وَمَأْوَىٰهُ
- and his abode
- இன்னும் அவருடைய தங்குமிடம்
- l-nāru
- ٱلنَّارُۖ
- (will be) the Fire
- நரகம்தான்
- wamā
- وَمَا
- And not
- இல்லை
- lilẓẓālimīna
- لِلظَّٰلِمِينَ
- for the wrongdoers
- அநியாயக்காரர்களுக்கு
- min anṣārin
- مِنْ أَنصَارٍ
- of (any) helpers
- உதவியாளர்களில் எவரும்
Transliteration:
Laqad kafaral lazeena qaalooo innal laaha Huwal maseehub nu Maryama wa qaalal Maseehu yaa Baneee Israaa'eela budul laaha Rabbee wa Rabbakum innnahoo many-yushrik ballaahi faqad harramal laahu 'alaihil jannata wa maa waahun Naaru wa maa lizzaalimeena min ansaar(QS. al-Māʾidah:72)
English Sahih International:
They have certainly disbelieved who say, "Allah is the Messiah, the son of Mary" while the Messiah has said, "O Children of Israel, worship Allah, my Lord and your Lord." Indeed, he who associates others with Allah – Allah has forbidden him Paradise, and his refuge is the Fire. And there are not for the wrongdoers any helpers. (QS. Al-Ma'idah, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்" என்று கூறியவர்களும் உண்மையாகவே காஃபிர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ "இஸ்ராயீலின் சந்ததிகளே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்" என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭௨)
Jan Trust Foundation
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்| “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"நிச்சயமாக அல்லாஹ், அவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்" என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: "இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். அவருடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.