Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭

Qur'an Surah Al-Ma'idah Verse 7

ஸூரத்துல் மாயிதா [௫]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ وَمِيْثَاقَهُ الَّذِيْ وَاثَقَكُمْ بِهٖٓ ۙاِذْ قُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا ۖوَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ (المائدة : ٥)

wa-udh'kurū
وَٱذْكُرُوا۟
And remember
நினைவு கூறுங்கள்
niʿ'mata
نِعْمَةَ
(the) Favor
அருளை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
wamīthāqahu
وَمِيثَٰقَهُ
and His covenant
இன்னும் அவனுடைய உறுதிமொழியை
alladhī
ٱلَّذِى
which
எது/உங்களிடம் உறுதி மொழி வாங்கினான்
wāthaqakum
وَاثَقَكُم
He bound you
அதை
bihi
بِهِۦٓ
with [it]
போது
idh qul'tum
إِذْ قُلْتُمْ
when you said
கூறினீர்கள்
samiʿ'nā
سَمِعْنَا
"We heared
செவிமடுத்தோம்
wa-aṭaʿnā
وَأَطَعْنَاۖ
and we obeyed;"
இன்னும் கீழ்ப்படிந்தோம்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
and fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
Allah
அல்லாஹ்வை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knower
நன்கறிந்தவன்
bidhāti
بِذَاتِ
of what
உள்ளவற்றை
l-ṣudūri
ٱلصُّدُورِ
(is in) the breasts
நெஞ்சங்களில்

Transliteration:

Wazkuroo ni'matal laahi 'alaikum wa meesaaqahul lazee waasaqakum biheee iz qultum sami'naa wa ata'naa wattaqul laah; innal laaha 'aleemum bizaatis sudoor (QS. al-Māʾidah:7)

English Sahih International:

And remember the favor of Allah upon you and His covenant with which He bound you when you said, "We hear and we obey"; and fear Allah. Indeed, Allah is Knowing of that within the breasts. (QS. Al-Ma'idah, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கியபொழுது அதனை நீங்கள் உறுதிப்படுத்தி "நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭)

Jan Trust Foundation

மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, “நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்” என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், "செவிமடுத்தோம், கீழ்ப்படிந்தோம்" என்று நீங்கள் கூறியபோது அவன் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய அவனுடைய உறுதிமொழியையும் நினைவுகூறுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.