Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௮

Qur'an Surah Al-Ma'idah Verse 68

ஸூரத்துல் மாயிதா [௫]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰى شَيْءٍ حَتّٰى تُقِيْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَ وَمَآ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ ۗوَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّآ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًاۚ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ (المائدة : ٥)

qul
قُلْ
Say
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
"O People (of) the Book!
வேதக்காரர்களே
lastum
لَسْتُمْ
You are not
நீங்கள் இல்லை
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
on anything
ஒரு விஷயத்திலும்
ḥattā
حَتَّىٰ
until
வரை
tuqīmū
تُقِيمُوا۟
you stand fast
நிலைநிறுத்துவீர்கள்
l-tawrāta
ٱلتَّوْرَىٰةَ
(by) the Taurat
தவ்றாத்தை
wal-injīla
وَٱلْإِنجِيلَ
and the Injeel
இன்ஜீலை
wamā
وَمَآ
and what
இன்னும் எது
unzila
أُنزِلَ
has been revealed
இறக்கப்பட்டது
ilaykum
إِلَيْكُم
to you
உங்களுக்கு
min
مِّن
from
இருந்து
rabbikum
رَّبِّكُمْۗ
your Lord
உங்கள் இறைவன்
walayazīdanna
وَلَيَزِيدَنَّ
And surely increase
நிச்சயமாக அதிகப்படுத்துகிறது
kathīran
كَثِيرًا
many
அதிகமானவர்களுக்கு
min'hum
مِّنْهُم
of them
அவர்களில் எது/இறக்கப்பட்டது
mā unzila
مَّآ أُنزِلَ
what has been revealed
உமக்கு
ilayka
إِلَيْكَ
to you
இருந்து
min
مِن
from
உம் இறைவன்
rabbika
رَّبِّكَ
your Lord
வரம்பு மீறுவதை
ṭugh'yānan
طُغْيَٰنًا
(in) rebellion
இன்னும் நிராகரிப்பை
wakuf'ran
وَكُفْرًاۖ
and disbelief
ஆகவே கவலைப்படாதீர்
falā tasa
فَلَا تَأْسَ
So (do) not grieve
மீது
ʿalā
عَلَى
over
சமுதாயம்
l-qawmi
ٱلْقَوْمِ
the people
நிராகரிப்பாளர்கள்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelieving
Err

Transliteration:

Qul yaaa Ahlal Kitaabi lastum 'alaa shai'in hattaa tuqeemut Tawraata wal Injeela wa maaa unzila ilaikum mir Rabbikum; wa layazeedanna kaseeram minhum maa unzila ilaika mir Rabbika tugh yaananw wa kufran falaa taasa 'alal qawmil kaafireen (QS. al-Māʾidah:68)

English Sahih International:

Say, "O People of the Scripture, you are [standing] on nothing until you uphold [the law of] the Torah, the Gospel, and what has been revealed to you from your Lord [i.e., the Quran]." And that which has been revealed to you from your Lord will surely increase many of them in transgression and disbelief. So do not grieve over the disbelieving people. (QS. Al-Ma'idah, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) "வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடித்து வரும்வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர் களல்ல" என்று நீங்கள் கூறுங்கள். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலான வர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வருகிறது. ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௬௮)

Jan Trust Foundation

“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக, "வேதக்காரர்களே! தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை."உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான சமுதாயத்தைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர்.