Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௫

Qur'an Surah Al-Ma'idah Verse 65

ஸூரத்துல் மாயிதா [௫]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ اَنَّ اَهْلَ الْكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِيْمِ (المائدة : ٥)

walaw anna
وَلَوْ أَنَّ
And if that
இருந்தால்
ahla l-kitābi
أَهْلَ ٱلْكِتَٰبِ
(the) People (of) the Book
வேதக்காரர்கள்
āmanū
ءَامَنُوا۟
(had) believed
நம்பிக்கை கொண்டார்கள்
wa-ittaqaw
وَٱتَّقَوْا۟
and feared (Allah)
இன்னும் அஞ்சினார்கள்
lakaffarnā
لَكَفَّرْنَا
surely We (would have) removed
நிச்சயமாக அகற்றிடுவோம்
ʿanhum
عَنْهُمْ
from them
அவர்களை விட்டு
sayyiātihim
سَيِّـَٔاتِهِمْ
their evil (deeds)
பாவங்களை அவர்களுடைய
wala-adkhalnāhum
وَلَأَدْخَلْنَٰهُمْ
and surely We (would have) admitted them
இன்னும் நுழைத்திடுவோம்/அவர்களை
jannāti
جَنَّٰتِ
[to] Gardens
சொர்க்கங்களில்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
(of) Bliss
இன்பம் நிறைந்த

Transliteration:

Wa law anna Ahlal Kitaabi aamanoo wattaqaw lakaffarnaa 'anhum saiyiaatihim wa la adkhalnaahu Jannaatin Na'eem (QS. al-Māʾidah:65)

English Sahih International:

And if only the People of the Scripture had believed and feared Allah, We would have removed from them their misdeeds and admitted them to Gardens of Pleasure. (QS. Al-Ma'idah, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதனை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சுவனபதிகளில் நிச்சயமாக நாம் அவர்கள் நுழையும்படி செய்வோம். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௬௫)

Jan Trust Foundation

வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக, வேதக்காரர்கள் (இத்தூதரை) நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி இருந்தால் அவர்களை விட்டும் அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக அகற்றிடுவோம். இன்பம் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நிச்சயமாக நுழைத்திடுவோம்.