Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௪

Qur'an Surah Al-Ma'idah Verse 64

ஸூரத்துல் மாயிதா [௫]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ۗغُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِۙ يُنْفِقُ كَيْفَ يَشَاۤءُۗ وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّآ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًاۗ وَاَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاۤءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِۗ كُلَّمَآ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙوَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًاۗ وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ (المائدة : ٥)

waqālati
وَقَالَتِ
And said
கூறினர்
l-yahūdu
ٱلْيَهُودُ
the Jews
யூதர்கள்
yadu
يَدُ
The Hand
கை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
maghlūlatun
مَغْلُولَةٌۚ
(is) chained"
கட்டப்பட்டிருக்கிறது
ghullat
غُلَّتْ
Are chained
கட்டப்பட்டன
aydīhim
أَيْدِيهِمْ
their hands
அவர்களுடைய கைகள்
waluʿinū
وَلُعِنُوا۟
and they have been cursed
சபிக்கப்பட்டனர்
bimā
بِمَا
for what
எதன் காரணமாக
qālū
قَالُواۘ
they said
கூறினர்
bal
بَلْ
Nay
மாறாக
yadāhu
يَدَاهُ
His Hands
அவனுடைய இரு கைகள்
mabsūṭatāni
مَبْسُوطَتَانِ
(are) stretched out
விரிக்கப்பட்டுள்ளன
yunfiqu
يُنفِقُ
He spends
தர்மம் புரிகிறான்
kayfa
كَيْفَ
how
எவ்வாறு
yashāu
يَشَآءُۚ
He wills
அவன் நாடுகிறான்
walayazīdanna
وَلَيَزِيدَنَّ
And surely increase
நிச்சயமாக அதிகப்படுத்தும்
kathīran
كَثِيرًا
many
அதிகமானோர்
min'hum
مِّنْهُم
of them
அவர்களில்
mā unzila
مَّآ أُنزِلَ
what has been revealed
எது/இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
min
مِن
from
இருந்து
rabbika
رَّبِّكَ
your Lord
உம் இறைவன்
ṭugh'yānan
طُغْيَٰنًا
(in) rebellion
வரம்பு மீறுவதை
wakuf'ran
وَكُفْرًاۚ
and disbelief
இன்னும் நிராகரிப்பை
wa-alqaynā
وَأَلْقَيْنَا
And We have cast
ஏற்படுத்தினோம்
baynahumu
بَيْنَهُمُ
among them
அவர்களுக்கு மத்தியில்
l-ʿadāwata
ٱلْعَدَٰوَةَ
[the] enmity
பகைமையை
wal-baghḍāa
وَٱلْبَغْضَآءَ
and [the] hatred
இன்னும் வெறுப்பை
ilā
إِلَىٰ
till
வரை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِۚ
(the) Day (of) the Resurrection
மறுமை நாள்
kullamā
كُلَّمَآ
Every time
எல்லாம்
awqadū
أَوْقَدُوا۟
they kindled
மூட்டினார்கள்
nāran
نَارًا
(the) fire
நெருப்பை
lil'ḥarbi
لِّلْحَرْبِ
of [the] war
போருக்கு
aṭfa-ahā
أَطْفَأَهَا
it (was) extinguished
அணைத்து விட்டான்/அதை
l-lahu
ٱللَّهُۚ
(by) Allah
அல்லாஹ்
wayasʿawna
وَيَسْعَوْنَ
And they strive
இன்னும் விரைகிறார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
fasādan
فَسَادًاۚ
spreading corruption
கலகம் செய்வதற்காக
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not love
நேசிக்க மாட்டான்
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
the corrupters
கலகம் செய்பவர்களை

Transliteration:

Wa qaalatil Yahoodu Yadullaahi maghloolah; ghulla aideehim wa lu'inoo bimaa qaaloo; bal yadaahu mabsoo tataani yunfiqu kaifa yashaaa'; wa la yazeedanna kaseeramm minhum maaa unzila ilaika mir Rabbika tughyaananw wa kufraa; wa alqainaa bainahumul 'adaawata wal baghdaaa a' ilaa Yawmil Qiyaamah; kullamaaa awqadoo naaral lilharbi at fa-ahal laah; wa yas'awna fil ardi fasaadaa; wal laahu laa yuhibbul mufsideen (QS. al-Māʾidah:64)

English Sahih International:

And the Jews say, "The hand of Allah is chained." Chained are their hands, and cursed are they for what they say. Rather, both His hands are extended; He spends however He wills. And that which has been revealed to you from your Lord will surely increase many of them in transgression and disbelief. And We have cast among them animosity and hatred until the Day of Resurrection. Every time they kindled the fire of war [against you], Allah extinguished it. And they strive throughout the land [causing] corruption, and Allah does not like corrupters. (QS. Al-Ma'idah, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது" என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி, இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கின்றான். ஆனால், உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகின்றது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையும், வெறுப்பையும் இறுதிநாள் வரையில் (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கை யாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகின்றார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௬௪)

Jan Trust Foundation

“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறினர். அவர்களுடைய கைகள் கட்டப்பட்டன. அவர்கள் கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிக்கப்பட்டுள்ளன. அவன் நாடியவாறு தர்மம் புரிகிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு வரம்பு மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். அல்லாஹ், கலகம் செய்பவர்களை நேசிக்கமாட்டான்.