Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௩

Qur'an Surah Al-Ma'idah Verse 63

ஸூரத்துல் மாயிதா [௫]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْلَا يَنْهٰىهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَۗ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ (المائدة : ٥)

lawlā yanhāhumu
لَوْلَا يَنْهَىٰهُمُ
Why (do) not forbid them
அவர்களை தடை செய்ய வேண்டாமா?
l-rabāniyūna
ٱلرَّبَّٰنِيُّونَ
the Rabbis
குருமார்கள்
wal-aḥbāru
وَٱلْأَحْبَارُ
and the religious scholars
இன்னும் பண்டிதர்கள்
ʿan qawlihimu
عَن قَوْلِهِمُ
from their saying
அவர்களுடைய பேச்சிலிருந்து
l-ith'ma
ٱلْإِثْمَ
the sinful
பாவமான
wa-aklihimu
وَأَكْلِهِمُ
and their eating
இன்னும் அவர்கள் விழுங்குவது
l-suḥ'ta
ٱلسُّحْتَۚ
(of) the forbidden?
விலக்கப்பட்டதை
labi'sa
لَبِئْسَ
Surely evil
கெட்டுவிட்டது
mā kānū yaṣnaʿūna
مَا كَانُوا۟ يَصْنَعُونَ
(is) what they used to do
எது/இருந்தார்கள்/செய்கிறார்கள்

Transliteration:

Law laa yanhaahumur rabbaaniyyoona wal ahbaaru 'an qawlihimul ismaa wa aklihimus suht; labi'sa maa kaanoo yasna'oon (QS. al-Māʾidah:63)

English Sahih International:

Why do the rabbis and religious scholars not forbid them from saying what is sinful and devouring what is unlawful? How wretched is what they have been practicing. (QS. Al-Ma'idah, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவைகளை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டது. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௬௩)

Jan Trust Foundation

அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய பாவமான பேச்சிலிருந்தும், விலக்கப்பட்டதை விழுங்குவதிலிருந்தும், குருமார்களும் பண்டிதர்களும் அவர்களை தடை செய்ய வேண்டாமா? அவர்கள் செய்துகொண்டிருந்தது கெட்டுவிட்டது.