Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௯

Qur'an Surah Al-Ma'idah Verse 59

ஸூரத்துல் மாயிதா [௫]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّآ اِلَّآ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلُۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ (المائدة : ٥)

qul
قُلْ
Say
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
"O People (of) the Book!
வேதக்காரர்களே
hal tanqimūna
هَلْ تَنقِمُونَ
Do you resent
நீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?)
minnā
مِنَّآ
[of] us
எங்களை
illā
إِلَّآ
except
தவிர
an āmannā
أَنْ ءَامَنَّا
that we believe
நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wamā unzila
وَمَآ أُنزِلَ
and what has been revealed
இன்னும் இறக்கப்பட்டதை
ilaynā
إِلَيْنَا
to us
எங்களுக்கு
wamā unzila
وَمَآ أُنزِلَ
and what was revealed
இன்னும் இறக்கப்பட்டதை
min qablu
مِن قَبْلُ
from before
முன்னர்
wa-anna
وَأَنَّ
and that
நிச்சயமாக அதிகமானவர்கள்
aktharakum
أَكْثَرَكُمْ
most of you
நிச்சயமாக அதிகமானவர்கள் உங்களில்
fāsiqūna
فَٰسِقُونَ
(are) defiantly disobedient"
பாவிகள்

Transliteration:

Qul yaaa Ahlal Kitaabi hal tanqimoona minnaaa illaaa an aamannaa billaahi wa maaa unzila ilainaa wa maa unzila min qablu wa annna aksarakum faasiqoon (QS. al-Māʾidah:59)

English Sahih International:

Say, "O People of the Scripture, do you resent us except [for the fact] that we have believed in Allah and what was revealed to us and what was revealed before and because most of you are defiantly disobedient?" (QS. Al-Ma'idah, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

"வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீங்கள் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றீர்கள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)" என்று கூறுங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫௯)

Jan Trust Foundation

“வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதக்காரர்களே! "அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், (இதற்கு) முன்னர் இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) எங்களை நீங்கள் வெறுக்கிறீர்களா? நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள்" என்று (நபியே!) கூறுவீராக.