Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௬

Qur'an Surah Al-Ma'idah Verse 56

ஸூரத்துல் மாயிதா [௫]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ ࣖ (المائدة : ٥)

waman
وَمَن
And whoever
எவர்
yatawalla
يَتَوَلَّ
takes as an ally
நேசிக்கிறார்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
warasūlahu
وَرَسُولَهُۥ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதரை
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
and those who believe
இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
ḥiz'ba
حِزْبَ
(the) party
படையினர்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
humu
هُمُ
they
அவர்கள்தான்
l-ghālibūna
ٱلْغَٰلِبُونَ
(are) the victorious
வெற்றியாளர்கள்

Transliteration:

Wa mai yatawallal laaha wa Rasoolahoo wallazeena aamanoo fa inna hizbal laahi humul ghaaliboon (QS. al-Māʾidah:56)

English Sahih International:

And whoever is an ally of Allah and His Messenger and those who have believed – indeed, the party of Allah – they will be the predominant. (QS. Al-Ma'idah, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

அன்றி எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக "ஹிஸ்புல்லாக்கள்" என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்.) அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫௬)

Jan Trust Foundation

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் நேசிக்கிறார்களோ (அவர்கள் அல்லாஹ்வின் படையினர்.) நிச்சயமாக அல்லாஹ்வின் படையினர்தான் வெற்றியாளர்கள்.