Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௪௮

Qur'an Surah Al-Ma'idah Verse 48

ஸூரத்துல் மாயிதா [௫]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَآ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَهُمْ عَمَّا جَاۤءَكَ مِنَ الْحَقِّۗ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّيَبْلُوَكُمْ فِيْ مَآ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرٰتِۗ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ (المائدة : ٥)

wa-anzalnā
وَأَنزَلْنَآ
And We revealed
இன்னும் இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
இவ்வேதத்தை
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in [the] truth
உண்மையுடன் கூடிய
muṣaddiqan
مُصَدِّقًا
confirming
உண்மைப்படுத்தக் கூடியதாக
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِ
what (was) before his hands
தனக்கு முன்னுள்ளதை
mina
مِنَ
of
இருந்து
l-kitābi
ٱلْكِتَٰبِ
the Book
வேதம்
wamuhayminan
وَمُهَيْمِنًا
and a guardian
இன்னும் பாதுகாக்கக் கூடியதாக
ʿalayhi
عَلَيْهِۖ
over it
அதை
fa-uḥ'kum
فَٱحْكُم
So judge
ஆகவே தீர்ப்பளிப்பீராக!
baynahum
بَيْنَهُم
between them
அவர்களுக்கு மத்தியில்
bimā anzala
بِمَآ أَنزَلَ
by what has revealed
இறக்கியதைக் கொண்டே
l-lahu
ٱللَّهُۖ
Allah
அல்லாஹ்
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
and (do) not follow
பின்பற்றாதீர்
ahwāahum
أَهْوَآءَهُمْ
their vain desires
விருப்பங்களை அவர்களுடைய
ʿammā
عَمَّا
when
எதைவிட்டு
jāaka
جَآءَكَ
has come to you
வந்தது/உமக்கு
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّۚ
of the truth
உண்மையிலிருந்து
likullin
لِكُلٍّ
For each
ஒவ்வொருவருக்கும்
jaʿalnā
جَعَلْنَا
We have made
ஏற்படுத்தினோம்
minkum
مِنكُمْ
for you
உங்களில்
shir'ʿatan
شِرْعَةً
a law
ஒரு மார்க்கத்தை
wamin'hājan
وَمِنْهَاجًاۚ
and a clear way
இன்னும் ஒரு வழியை
walaw shāa
وَلَوْ شَآءَ
And if (had) willed
நாடி இருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lajaʿalakum
لَجَعَلَكُمْ
He (would have) made you
உங்களை ஆக்கியிருப்பான்
ummatan
أُمَّةً
a community
ஒரு சமுதாயமாக
wāḥidatan walākin
وَٰحِدَةً وَلَٰكِن
one [and] but
ஒரே/எனினும்
liyabluwakum
لِّيَبْلُوَكُمْ
to test you
அவன் உங்களை சோதிப்பதற்காக
fī mā ātākum
فِى مَآ ءَاتَىٰكُمْۖ
in what He (has) given you
உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில்
fa-is'tabiqū
فَٱسْتَبِقُوا۟
so race
ஆகவே முந்துங்கள்
l-khayrāti
ٱلْخَيْرَٰتِۚ
(to) the good
நன்மைகளில்
ilā
إِلَى
To
பக்கம்
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
marjiʿukum
مَرْجِعُكُمْ
you will return
உங்கள் மீளுமிடம்
jamīʿan
جَمِيعًا
all
அனைவரும்
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
then He will inform you
அறிவிப்பான்/உங்களுக்கு
bimā
بِمَا
of what
எதை
kuntum
كُنتُمْ
you were
இருந்தீர்கள்
fīhi
فِيهِ
concerning it
அதில்
takhtalifūna
تَخْتَلِفُونَ
differing
முரண்படுகிறீர்கள்

Transliteration:

Wa anzalnaa ilaikal Kitaaba bilhaqqi musaddiqallimaa baina yadaihi minal Kitaabi wa muhaiminan 'alaihi fahkum bainahum bimaa anzalal laahu wa laa tattabi ahwaaa'ahum 'ammaa jaaa'aka minal haqq; likullin ja'alnaa minkum shir'atanw wa minhaajaa; wa law shaaa'al laahu laja'alakum ummatanw waahidatanw wa laakil liyabluwakum fee maa aataakum fastabiqul khairaat; ilal laahi arji'ukum jamee'an fayunab bi'ukum bimaa kuntum feehi takhtalifoon (QS. al-Māʾidah:48)

English Sahih International:

And We have revealed to you, [O Muhammad], the Book [i.e., the Quran] in truth, confirming that which preceded it of the Scripture and as a criterion over it. So judge between them by what Allah has revealed and do not follow their inclinations away from what has come to you of the truth. To each of you We prescribed a law and a method. Had Allah willed, He would have made you one nation [united in religion], but [He intended] to test you in what He has given you; so race to [all that is] good. To Allah is your return all together, and He will [then] inform you concerning that over which you used to differ. (QS. Al-Ma'idah, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உங்கள்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி, அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. ஆகவே (நபியே!) நீங்கள் அல்லாஹ் (உங்களுக்கு) அருளிய இதனைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். உங்களுக்கு வந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கின்றான்.) ஆகவே, (இவைகளில்) மேலான (இஸ்லாமிய) வழியின் பக்கம் விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கின்றது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந் தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௪௮)

Jan Trust Foundation

மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) தனக்கு முன்னுள்ள வேதத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, அதைப் பாதுகாக்கக்கூடியதாக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். ஆகவே அல்லாஹ் (உமக்கு) இறக்கியதைக் கொண்டே அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டு அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் எதில் முரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை உங்களுக்கு அறிவிப்பான்.