Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௪௬

Qur'an Surah Al-Ma'idah Verse 46

ஸூரத்துல் மாயிதா [௫]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِعِيْسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰىةِ ۖواٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ فِيْهِ هُدًى وَّنُوْرٌۙ وَّمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًى وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَۗ (المائدة : ٥)

waqaffaynā
وَقَفَّيْنَا
And We sent
தொடரச்செய்தோம்
ʿalā āthārihim
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
on their footsteps
அவர்களுடைய அடிச்சுவடுகளில்
biʿīsā
بِعِيسَى
Isa
ஈஸாவை
ib'ni
ٱبْنِ
son
மகன்
maryama
مَرْيَمَ
(of) Maryam
மர்யமுடைய
muṣaddiqan
مُصَدِّقًا
confirming
உண்மைப்படுத்துபவராக
limā
لِّمَا
what
எதை
bayna yadayhi
بَيْنَ يَدَيْهِ
(was) between his hands
தனக்கு முன்
mina
مِنَ
of
இருந்து
l-tawrāti
ٱلتَّوْرَىٰةِۖ
the Taurat
தவ்றாத்
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
and We gave him
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
l-injīla
ٱلْإِنجِيلَ
the Injeel
இன்ஜீலை
fīhi hudan
فِيهِ هُدًى
in it (was) Guidance
அதில்/நேர்வழி
wanūrun
وَنُورٌ
and light
இன்னும் ஒளி
wamuṣaddiqan
وَمُصَدِّقًا
and confirming
உண்மைப்படுத்தக் கூடியது
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِ
what (was) between his hands
எதை/தனக்கு முன்
mina l-tawrāti
مِنَ ٱلتَّوْرَىٰةِ
of the Taurat
தவ்றாத்திலிருந்து
wahudan
وَهُدًى
and a Guidance
நேர்வழியாக
wamawʿiẓatan
وَمَوْعِظَةً
and an admonition
இன்னும் ஓர் உபதேசமாக
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
for the God conscious
அஞ்சுபவர்களுக்கு

Transliteration:

Wa qaffainaa 'alaaa aasaaarihim bi 'Eesab ni Maryama musaddiqal limaa baina yadihi minat Tawraati wa aatainaahul Injeela feehi hudanw wa noorunw wa musaddiqal limaa baina yadaihi minat Tawraati wa hudanw wa maw'izatal lilmuttaqeen (QS. al-Māʾidah:46)

English Sahih International:

And We sent, following in their footsteps, Jesus, the son of Mary, confirming that which came before him in the Torah; and We gave him the Gospel, in which was guidance and light and confirming that which preceded it of the Torah as guidance and instruction for the righteous. (QS. Al-Ma'idah, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பி வைத்தோம். அவர் தன் முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அன்றி, அவருக்கு "இன்ஜீல்" என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கின்றது. இறை அச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கின்றது. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௪௬)

Jan Trust Foundation

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய அடிச்சுவடுகளில் தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்துபவராக மர்யமுடைய மகன் ஈஸாவையும் தொடரச்செய்தோம். அவருக்கு ‘இன்ஜீல்'ஐ கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. (அதை) தனக்கு முன்னுள்ள தவ்றாத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, நேர்வழியாக, அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாக (ஆக்கினோம்).