Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩௮

Qur'an Surah Al-Ma'idah Verse 38

ஸூரத்துல் மாயிதா [௫]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْٓا اَيْدِيَهُمَا جَزَاۤءًۢ بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ۗوَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ (المائدة : ٥)

wal-sāriqu
وَٱلسَّارِقُ
And (for) the male thief
திருடன்
wal-sāriqatu
وَٱلسَّارِقَةُ
and the female thief -
இன்னும் திருடி
fa-iq'ṭaʿū
فَٱقْطَعُوٓا۟
[then] cut off
வெட்டுங்கள்
aydiyahumā
أَيْدِيَهُمَا
their hands
அவ்விருவரின் கரங்களை
jazāan
جَزَآءًۢ
(as) a recompense
கூலியாக
bimā kasabā
بِمَا كَسَبَا
for what they earned
அவ்விருவர் செய்ததன் காரணமாக
nakālan
نَكَٰلًا
(as) an exemplary (punishment)
தண்டனையாக
mina l-lahi
مِّنَ ٱللَّهِۗ
from Allah
அல்லாஹ்விடமிருந்து
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Wassaariqu qassaariqatu faqta'oo aidiyahumma jazaaa'am bimaa kasabaa nakaalam minal laah; wallaahu 'Azeezun hakeem (QS. al-Māʾidah:38)

English Sahih International:

[As for] the thief, the male and the female, amputate their hands in recompense for what they earned [i.e., committed] as a deterrent [punishment] from Allah. And Allah is Exalted in Might and Wise. (QS. Al-Ma'idah, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩௮)

Jan Trust Foundation

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திருடன், திருடி அவர்கள் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் கரங்களை வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான்.