Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩௩

Qur'an Surah Al-Ma'idah Verse 33

ஸூரத்துல் மாயிதா [௫]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَا جَزٰۤؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْٓا اَوْ يُصَلَّبُوْٓا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِۗ ذٰلِكَ لَهُمْ خِزْيٌ فِى الدُّنْيَا وَلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ (المائدة : ٥)

innamā jazāu
إِنَّمَا جَزَٰٓؤُا۟
Only (the) recompense
தண்டனையெல்லாம்
alladhīna
ٱلَّذِينَ
(for) those who
எவர்கள்
yuḥāribūna
يُحَارِبُونَ
wage war
போரிடுவார்கள்
l-laha
ٱللَّهَ
(against) Allah
அல்லாஹ்விடம்
warasūlahu
وَرَسُولَهُۥ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதர்
wayasʿawna
وَيَسْعَوْنَ
and strive
இன்னும் முயற்சிக்கின்றனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
fasādan
فَسَادًا
spreading corruption
குழப்பம் செய்ய
an yuqattalū
أَن يُقَتَّلُوٓا۟
(is) that they be killed
அவர்கள் கொல்லப்படுவது
aw
أَوْ
or
அல்லது
yuṣallabū
يُصَلَّبُوٓا۟
they be crucified
அவர்கள் சிலுவையில் அறையப்படுவது
aw
أَوْ
or
அல்லது
tuqaṭṭaʿa
تُقَطَّعَ
be cut off
வெட்டப்படுவது
aydīhim
أَيْدِيهِمْ
their hands
அவர்களின் கரங்கள்
wa-arjuluhum
وَأَرْجُلُهُم
and their feet
இன்னும் அவர்களின் கால்கள்
min khilāfin
مِّنْ خِلَٰفٍ
of opposite sides
மாற்றமாக
aw
أَوْ
or
அல்லது
yunfaw
يُنفَوْا۟
they be exiled
அவர்கள் கடத்தப்படுவது
mina l-arḍi
مِنَ ٱلْأَرْضِۚ
from the land
இருந்து/நாடு
dhālika
ذَٰلِكَ
That
இது
lahum
لَهُمْ
(is) for them
அவர்களுக்கு
khiz'yun
خِزْىٌ
disgrace
இழிவு
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَاۖ
in the world
இவ்வுலகத்தில்
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் அவர்களுக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையில்
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
great
பெரியது

Transliteration:

Innamaa jazaaa'ul lazeena yuhaariboonal laaha wa Rasoolahoo wa yas'awna fil ardi fasaadan ai yuqattalooo aw yusallabooo aw tuqatta'a aideehim wa arjuluhum min khilaafin aw yunfaw minalard; zaalika lahum khizyun fid dunyaa wa lahum fil Aakhirati 'azaabun 'azeem (QS. al-Māʾidah:33)

English Sahih International:

Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and strive upon earth [to cause] corruption is none but that they be killed or crucified or that their hands and feet be cut off from opposite sides or that they be exiled from the land. That is for them a disgrace in this world; and for them in the Hereafter is a great punishment, (QS. Al-Ma'idah, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்துகொண்டும் திரிகின்றார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்று விடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். அன்றி, மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩௩)

Jan Trust Foundation

அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுபவர்கள் இன்னும் பூமியில் குழப்பம் செய்ய முயல்பவர்களுடைய தண்டனையெல்லாம் அவர்கள் கொல்லப்படுவது அல்லது அவர்கள் சிலுவையில் அறையப்படுவது அல்லது அவர்கள் மாறு கை, மாறு கால் வெட்டப்படுவது அல்லது அந்த நாட்டில் இருந்து (வேறு நாட்டுக்கு) அவர்கள் கடத்தப்படுவதுதான். இது அவர்களுக்கு இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் பெரிய வேதனை உண்டு.