Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௯

Qur'an Surah Al-Ma'idah Verse 29

ஸூரத்துல் மாயிதா [௫]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنِّيْٓ اُرِيْدُ اَنْ تَبُوْۤاَ بِاِثْمِيْ وَاِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِۚ وَذٰلِكَ جَزَاۤؤُا الظّٰلِمِيْنَۚ (المائدة : ٥)

innī
إِنِّىٓ
"Indeed I
நிச்சயமாக நான்
urīdu
أُرِيدُ
wish
நாடுகிறேன்
an tabūa
أَن تَبُوٓأَ
that you be laden
நீ திரும்புவதை
bi-ith'mī
بِإِثْمِى
with my sin
என் பாவத்துடன்
wa-ith'mika
وَإِثْمِكَ
and your sin
உன் பாவம்
fatakūna
فَتَكُونَ
so you will be
ஆகிவிடுவாய்
min
مِنْ
among
இருந்து
aṣḥābi
أَصْحَٰبِ
(the) companions
வாசிகள்
l-nāri
ٱلنَّارِۚ
(of) the Fire
நரகம்
wadhālika
وَذَٰلِكَ
and that
இது
jazāu
جَزَٰٓؤُا۟
(is the) recompense
கூலி
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
(of) the wrong-doers"
அநியாயக்காரர்களின்

Transliteration:

Inee ureedu an tabooo'a bi ismee wa ismika fatakoona min Ashaabin Naar; wa zaalika jazaaa'uz zaalimeen (QS. al-Māʾidah:29)

English Sahih International:

Indeed, I want you to obtain [thereby] my sin and your sin so you will be among the companions of the Fire. And that is the recompense of wrongdoers." (QS. Al-Ma'idah, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

"என்னுடைய பாவச் சுமையையும், உன்னுடைய பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்" (என்று கூறினார்.) (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"என் பாவத்துடனும், உன் பாவத்துடனும் (இறைவன் பக்கம்) நீ திரும்புவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். (அவ்வாறு வந்தால்) நீ நரகவாசிகளில் ஆகி விடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்" (என்றும் கூறினார்).