Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௨௭

Qur'an Surah Al-Ma'idah Verse 27

ஸூரத்துல் மாயிதா [௫]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَيْ اٰدَمَ بِالْحَقِّۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِۗ قَالَ لَاَقْتُلَنَّكَ ۗ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ (المائدة : ٥)

wa-ut'lu
وَٱتْلُ
And recite
ஓதுவீராக
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் முன்
naba-a ib'nay
نَبَأَ ٱبْنَىْ
the story (of) two sons
செய்தியை/இரு மகன்களின்
ādama
ءَادَمَ
(of) Adam
ஆதமுடைய
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
உண்மையில்
idh qarrabā
إِذْ قَرَّبَا
when both offered
போது/ குர்பானி கொடுத்தனர்
qur'bānan
قُرْبَانًا
a sacrifice
ஒரு குர்பானியை
fatuqubbila
فَتُقُبِّلَ
and it was accepted
ஏற்றுக் கொள்ளப்பட்டது
min
مِنْ
from
இருந்து
aḥadihimā
أَحَدِهِمَا
one of them
அவ்விருவரில் ஒருவர்
walam yutaqabbal
وَلَمْ يُتَقَبَّلْ
and not was accepted
ஏற்கப்படவில்லை
mina
مِنَ
from
இருந்து
l-ākhari
ٱلْءَاخَرِ
the other
மற்றவர்
qāla
قَالَ
Said (the latter)
என்றார்
la-aqtulannaka
لَأَقْتُلَنَّكَۖ
"Surely I will kill you"
நிச்சயமாக உன்னைக்கொல்வேன்
qāla
قَالَ
Said (the former)
கூறினார்
innamā yataqabbalu
إِنَّمَا يَتَقَبَّلُ
"Only accepts
ஏற்பதெல்லாம்
l-lahu
ٱللَّهُ
(does) Allah
அல்லாஹ்
mina l-mutaqīna
مِنَ ٱلْمُتَّقِينَ
from the God fearing
அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்

Transliteration:

Watlu 'alaihim naba abnai Aadama bilhaqq; iz qarrabaa qurbaanan fatuqubbila min ahadihimaa wa lam yutaqabbal minal aakhari qaala la aqtulannnaka qaala innamaa yataqabbalul laahu minal muttaqeen (QS. al-Māʾidah:27)

English Sahih International:

And recite to them the story of Adam's two sons, in truth, when they both made an offering [to Allah], and it was accepted from one of them but was not accepted from the other. Said [the latter], "I will surely kill you." Said [the former], "Indeed, Allah only accepts from the righteous [who fear Him]. (QS. Al-Ma'idah, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். இருவரும் "குர்பானி" (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி அ)து ஏற்றுக் கொள்ளப் பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால் "நிச்சயம் நான் உன்னைக் கொன்று விடுவேன்" என்றார். உடனே (குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லவர்) "அல்லாஹ் ஏற்றுக் கொள்வ தெல்லாம் இறை அச்சமுள்ளவர்(களின் பலி)களைத்தான்" என்று பதில் கூறினார். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் செய்தியை உண்மையில் அவர்கள் முன் ஓதுவீராக. இருவரும் ஒரு "குர்பானி' (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) "நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்" என்றார். (ஏற்கப்பட்டவர்) "அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்" என்று கூறினார்.