Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௯

Qur'an Surah Al-Ma'idah Verse 19

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَهْلَ الْكِتٰبِ قَدْ جَاۤءَكُمْ رَسُوْلُنَا يُبَيِّنُ لَكُمْ عَلٰى فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَاۤءَنَا مِنْۢ بَشِيْرٍ وَّلَا نَذِيْرٍۗ فَقَدْ جَاۤءَكُمْ بَشِيْرٌ وَّنَذِيْرٌ ۗوَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ (المائدة : ٥)

yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
O People (of) the Book!
வேதக்காரர்களே
qad
قَدْ
Surely
வந்துவிட்டார்
jāakum
جَآءَكُمْ
has come to you
உங்களிடம்
rasūlunā
رَسُولُنَا
Our Messenger
நம் தூதர்
yubayyinu
يُبَيِّنُ
he makes clear
தெளிவுபடுத்துகிறார்
lakum
لَكُمْ
to you
உங்களிடம்
ʿalā fatratin
عَلَىٰ فَتْرَةٍ
[on] (after) an interval (of cessation)
இடைவெளியில்
mina l-rusuli
مِّنَ ٱلرُّسُلِ
of the Messengers
தூதர்களின்
an taqūlū
أَن تَقُولُوا۟
lest you say
நீங்கள் கூறாதிருக்க
مَا
"Not
வரவில்லை
jāanā
جَآءَنَا
(has) come to us
வரவில்லை எங்களுக்கு
min
مِنۢ
any
எவரும்
bashīrin
بَشِيرٍ
bearer of glad tidings
நற்செய்தி கூறுபவர்
walā
وَلَا
and not
இன்னும் இல்லை
nadhīrin
نَذِيرٍۖ
a warner"
எச்சரிப்பவர்
faqad
فَقَدْ
But surely
உறுதியாக
jāakum
جَآءَكُم
has come to you
வந்துவிட்டார் உங்களிடம்
bashīrun
بَشِيرٌ
a bearer of glad tidings
நற்செய்தி கூறுபவர்
wanadhīrun
وَنَذِيرٌۗ
and a warner
இன்னும் எச்சரிப்பவர்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
(is) on
மீதும்
kulli shayin
كُلِّ شَىْءٍ
every thing
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
All-Powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Yaaa Ahlal Kitaabi qad jaaa'akum Rasoolunaa yubaiyinu lakum 'alaa fatratim minal Rusuli an taqooloo maa jaaa'anaa mim basheerinw wa laa nazeerin faqad jaaa'akum basheerunw wa nazeer; wallaahu 'alaa kulli shai'in Qadeer (QS. al-Māʾidah:19)

English Sahih International:

O People of the Scripture, there has come to you Our Messenger to make clear to you [the religion] after a period [of suspension] of messengers, lest you say, "There came not to us any bringer of good tidings or a warner." But there has come to you a bringer of good tidings and a warner. And Allah is over all things competent. (QS. Al-Ma'idah, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரையில்) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் "நற்செய்தி கூறவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் கூடிய (ஒரு தூது)வர் எங்களிடம் வரவேயில்லை" என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நம்முடைய (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். அவர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவுமே இருக்கின்றார். அல்லாஹ், அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௯)

Jan Trust Foundation

வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வேதக்காரர்களே! "நற்செய்தி கூறுபவர், எச்சரிப்பவர் எவரும் எங்களுக்கு வரவில்லை" என்று நீங்கள் கூறாதிருக்க தூதர்களின் இடைவெளியில் நம் தூதர் உங்களிடம் வந்துவிட்டார். (அவர் இஸ்லாமை) உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். அல்லாஹ், எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.