குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧௯
Qur'an Surah Al-Ma'idah Verse 119
ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اللّٰهُ هٰذَا يَوْمُ يَنْفَعُ الصّٰدِقِيْنَ صِدْقُهُمْ ۗ لَهُمْ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗرَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ۗذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ (المائدة : ٥)
- qāla
- قَالَ
- Will say
- கூறுவான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- hādhā
- هَٰذَا
- "This
- இது
- yawmu
- يَوْمُ
- Day
- நாள்
- yanfaʿu
- يَنفَعُ
- will profit
- பலனளிக்கும்
- l-ṣādiqīna
- ٱلصَّٰدِقِينَ
- the truthful
- உண்மையாளர்களுக்கு
- ṣid'quhum
- صِدْقُهُمْۚ
- their truthfulness"
- அவர்களுடைய உண்மை
- lahum
- لَهُمْ
- For them
- அவர்களுக்கு
- jannātun
- جَنَّٰتٌ
- (are) Gardens
- சொர்க்கங்கள்
- tajrī
- تَجْرِى
- flows
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- from underneath it
- இருந்து/அதன் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- the rivers
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- will abide
- நிரந்தரமானவர்கள்
- fīhā abadan
- فِيهَآ أَبَدًاۚ
- in it forever"
- அதில்/என்றென்றும்
- raḍiya
- رَّضِىَ
- is pleased
- மகிழ்ச்சியடைவான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿanhum
- عَنْهُمْ
- with them
- அவர்களைப் பற்றி
- waraḍū
- وَرَضُوا۟
- and they are pleased
- இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்
- ʿanhu
- عَنْهُۚ
- with Him
- அவனைப் பற்றி
- dhālika
- ذَٰلِكَ
- That
- இதுதான்
- l-fawzu
- ٱلْفَوْزُ
- (is) the success
- வெற்றி
- l-ʿaẓīmu
- ٱلْعَظِيمُ
- (the) great
- மகத்தான
Transliteration:
Qaalal laahu haaza yawmu yanfa'us saadiqeena sidquhum; lahum janaatunn tajree min tahtihal anhaaru khaalideena feehaaa abadaa; radiyal laahu 'anhum wa radoo 'anh; zaalikal fawzul 'azeem(QS. al-Māʾidah:119)
English Sahih International:
Allah will say, "This is the Day when the truthful will benefit from their truthfulness." For them are gardens [in Paradise] beneath which rivers flow, wherein they will abide forever, Allah being pleased with them, and they with Him. That is the great attainment. (QS. Al-Ma'idah, Ayah ௧௧௯)
Abdul Hameed Baqavi:
அதற்கு அல்லாஹ் "உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள்" என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧௯)
Jan Trust Foundation
அப்போது அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாள் இதுவாகும், அவற்றின் கீழ் நதிகள் ஓடுகிற சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமானவர்கள், அவர்களைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைவான், அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இதுதான் மகத்தான வெற்றி.