Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧௫

Qur'an Surah Al-Ma'idah Verse 115

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اللّٰهُ اِنِّيْ مُنَزِّلُهَا عَلَيْكُمْ ۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّيْٓ اُعَذِّبُهٗ عَذَابًا لَّآ اُعَذِّبُهٗٓ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ ࣖ (المائدة : ٥)

qāla
قَالَ
Said
கூறினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
innī
إِنِّى
"Indeed I
நிச்சயமாக நான்
munazziluhā
مُنَزِّلُهَا
(will) send it down
அதை இறக்குவேன்
ʿalaykum
عَلَيْكُمْۖ
to you
உங்கள் மீது
faman
فَمَن
then whoever
ஆகவே எவர்
yakfur
يَكْفُرْ
disbelieves
நிராகரிப்பாரோ
baʿdu
بَعْدُ
after (that)
பின்னர்
minkum
مِنكُمْ
among you
உங்களில்
fa-innī
فَإِنِّىٓ
then indeed I
நிச்சயமாக நான்
uʿadhibuhu
أُعَذِّبُهُۥ
[I] will punish him
வேதனை செய்வேன்/ அவருக்கு
ʿadhāban
عَذَابًا
(with) a punishment
வேதனையால்
lā uʿadhibuhu
لَّآ أُعَذِّبُهُۥٓ
not I have punished
தண்டிக்க மாட்டேன்/அதைக்கொண்டு
aḥadan
أَحَدًا
anyone
ஒருவரையும்
mina l-ʿālamīna
مِّنَ ٱلْعَٰلَمِينَ
among the worlds"
உலகத்தாரில்

Transliteration:

Waalal laahu innee munaz ziluhaa 'alaikum faman yakfur ba'du minkum fa inneee u'azzibuhoo 'azaabal laaa u'azzibuhooo ahadam minal 'aalameen (QS. al-Māʾidah:115)

English Sahih International:

Allah said, "Indeed, I will send it down to you, but whoever disbelieves afterwards from among you – then indeed will I punish him with a punishment by which I have not punished anyone among the worlds." (QS. Al-Ma'idah, Ayah ௧௧௫)

Abdul Hameed Baqavi:

அதற்கு அல்லாஹ் "நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதனை உங்களுக்கு இறக்கி வைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்" என்று கூறினான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧௫)

Jan Trust Foundation

அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் அதை உங்கள் மீது இறக்குவேன். ஆகவே, பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, உலத்தாரில் ஒருவருக்கும் கொடுக்காத வேதனையை நிச்சயம் நான் அவருக்கு கொடுப்பேன்.”