Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧௪

Qur'an Surah Al-Ma'idah Verse 114

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللهم رَبَّنَآ اَنْزِلْ عَلَيْنَا مَاۤىِٕدَةً مِّنَ السَّمَاۤءِ تَكُوْنُ لَنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ (المائدة : ٥)

qāla
قَالَ
Said
கூறினார்
ʿīsā
عِيسَى
Isa
ஈஸா
ub'nu
ٱبْنُ
son
மகன்
maryama
مَرْيَمَ
(of) Maryam
மர்யமுடைய
l-lahuma
ٱللَّهُمَّ
"O Allah
அல்லாஹ்வே
rabbanā
رَبَّنَآ
our Lord
எங்கள் இறைவா
anzil
أَنزِلْ
send down
இறக்கு
ʿalaynā
عَلَيْنَا
to us
எங்கள் மீது
māidatan
مَآئِدَةً
a table spread
ஓர் உணவுத் தட்டை
mina
مِّنَ
from
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
the heaven
வானம்
takūnu
تَكُونُ
to be
அது இருக்கும்
lanā
لَنَا
for us
எங்களுக்கு
ʿīdan
عِيدًا
a festival
ஒரு பெருநாளாக
li-awwalinā
لِّأَوَّلِنَا
for first of us
எங்கள் முன் இருப்பவர்களுக்கு
waākhirinā
وَءَاخِرِنَا
and last of us
இன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்கு
waāyatan
وَءَايَةً
and a sign
இன்னும் ஓர் அத்தாட்சியாக
minka
مِّنكَۖ
from You
உன்னிடமிருந்து
wa-ur'zuq'nā
وَٱرْزُقْنَا
And provide us
இன்னும் எங்களுக்கு உணவளி
wa-anta khayru
وَأَنتَ خَيْرُ
and You (are) best
நீ மிகச் சிறந்தவன்
l-rāziqīna
ٱلرَّٰزِقِينَ
(of) the providers
உணவளிப்பவர்களில்

Transliteration:

Qaala 'Eesab nu Maryamal laahumma Rabbanaaa anzil 'alainaa maaa'idatam minas samaaa'i takoonu lanaa 'eedal li awwalinaa wa aakirinaa wa Aayatam minka warzuqnaa wa Anta khairur raaziqeen (QS. al-Māʾidah:114)

English Sahih International:

Said Jesus, the son of Mary, "O Allah, our Lord, send down to us a table [spread with food] from the heaven to be for us a festival for the first of us and the last of us and a sign from You. And provide for us, and You are the best of providers." (QS. Al-Ma'idah, Ayah ௧௧௪)

Abdul Hameed Baqavi:

அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா "எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னுடைய (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧௪)

Jan Trust Foundation

மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மர்யமுடைய மகன் ஈஸா கூறினார்: “அல்லாஹ்வே, எங்கள் இறைவா! வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்கள் மீது இறக்கு! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னிடமிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளி! நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”