Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧

Qur'an Surah Al-Ma'idah Verse 11

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ يَّبْسُطُوْٓا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ فَكَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْۚ وَاتَّقُوا اللّٰهَ ۗوَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ࣖ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
udh'kurū
ٱذْكُرُوا۟
Remember
நினைவு கூறுங்கள்
niʿ'mata
نِعْمَتَ
(the) Favor
அருளை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
idh hamma
إِذْ هَمَّ
when (were) determined
போது/நாடினர்
qawmun
قَوْمٌ
a people
ஒரு சமுதாயம்
an yabsuṭū
أَن يَبْسُطُوٓا۟
[to] stretch
அவர்கள் நீட்டுவதற்கு
ilaykum
إِلَيْكُمْ
towards you
உங்கள் பக்கம்
aydiyahum
أَيْدِيَهُمْ
their hands
தங்கள் கரங்களை
fakaffa
فَكَفَّ
but He restrained
தடுத்தான்
aydiyahum
أَيْدِيَهُمْ
their hands
அவர்களுடைய கரங்களை
ʿankum
عَنكُمْۖ
from you
உங்களை விட்டு
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
Allah
அல்லாஹ்வை
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
And upon Allah
அல்லாஹ் மீது
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
so let put the trust
நம்பிக்கை வைக்கட்டும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
the believers
நம்பிக்கையாளர்கள்

Transliteration:

Yaa aiyuhal lazeena aamanuz kuroo ni'matallaahi 'alaikum iz hamma qawmun ai yabsutooo ilaikum aidiyahm fakaffa aidiyahum 'ankum wattaqullaah; wa'alal laahi fal yatawakalil mu'minoon (QS. al-Māʾidah:11)

English Sahih International:

O you who have believed, remember the favor of Allah upon you when a people determined to extend their hands [in aggression] against you, but He withheld their hands from you; and fear Allah. And upon Allah let the believers rely. (QS. Al-Ma'idah, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கை கொண்ட அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூறுங்கள், ஒரு சமுதாயம் தங்கள் கரங்களை உங்கள் பக்கம் நீட்ட நாடியபோது, அல்லாஹ் அவர்களுடைய கரங்களை உங்களை விட்டுத் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வைக்கவும்.