Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௮

Qur'an Surah Al-Ma'idah Verse 108

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ اَدْنٰٓى اَنْ يَّأْتُوْا بِالشَّهَادَةِ عَلٰى وَجْهِهَآ اَوْ يَخَافُوْٓا اَنْ تُرَدَّ اَيْمَانٌۢ بَعْدَ اَيْمَانِهِمْۗ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ۗوَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ ࣖ (المائدة : ٥)

dhālika adnā
ذَٰلِكَ أَدْنَىٰٓ
That (is) closer
அது/மிக்கசுலபமானது
an yatū
أَن يَأْتُوا۟
that they will give
அவர்கள் வருவதற்கு
bil-shahādati
بِٱلشَّهَٰدَةِ
the testimony
சாட்சியத்தைக் கொண்டு
ʿalā wajhihā
عَلَىٰ وَجْهِهَآ
in its (true) form
அதற்குரிய முறையில்
aw
أَوْ
or
அல்லது
yakhāfū
يَخَافُوٓا۟
they would fear
அவர்கள் பயப்படுவது
an turadda
أَن تُرَدَّ
that will be refuted
மறுக்கப்படும்
aymānun baʿda
أَيْمَٰنٌۢ بَعْدَ
their oaths after
சத்தியங்கள்/பின்னர்
aymānihim
أَيْمَٰنِهِمْۗ
their (others) oaths
அவர்களுடைய சத்தியங்கள்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-is'maʿū
وَٱسْمَعُوا۟ۗ
and listen
செவிசாயுங்கள்
wal-lahu
وَٱللَّهُ
and Allah
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
the people
கூட்டத்தை
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
the defiantly disobedient
பாவிகளான

Transliteration:

Zaalika adnaaa ai yaatoo bishshahaadati 'alaa wajhihaaa aw yakhaafooo an turadda aimaanum ba'da aimaanihim; wattaqul laaha wasma'oo; wallaahu laa yahdil qawmal faasiqeen (QS. al-Māʾidah:108)

English Sahih International:

That is more likely that they will give testimony according to its [true] objective, or [at least] they would fear that [other] oaths might be taken after their oaths. And fear Allah and listen [i.e., obey Him]; and Allah does not guide the defiantly disobedient people. (QS. Al-Ma'idah, Ayah ௧௦௮)

Abdul Hameed Baqavi:

உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழி. அன்றி, அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதனைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் (இது மிக்க சுலபமான வழி.) ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦௮)

Jan Trust Foundation

இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது, சாட்சியத்தை அதற்குரிய முறையில் கொண்டு (அவர்கள்) வருவதற்கும் அல்லது அவர்களுடைய சத்தியங்களுக்குப் பின்னர் சத்தியங்கள் மறுக்கப்படும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக்க சுலபமானதாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள், செவிசாயுங்கள். பாவிகளான கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.