Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௫

Qur'an Surah Al-Ma'idah Verse 105

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْ ۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ ۗ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே
ʿalaykum
عَلَيْكُمْ
Upon you
காத்துக்கொள்ளுங்கள்
anfusakum
أَنفُسَكُمْۖ
(is to guard) yourselves
உங்களை
lā yaḍurrukum
لَا يَضُرُّكُم
Not will harm you
தீங்கிழைக்க மாட்டார்/உங்களுக்கு
man
مَّن
(those) who
எவர்
ḍalla
ضَلَّ
(have gone) astray
வழிகெட்டார்
idhā ih'tadaytum
إِذَا ٱهْتَدَيْتُمْۚ
when you have been guided
நீங்கள் நேர்வழி சென்றால்
ilā
إِلَى
To
பக்கம்
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
marjiʿukum
مَرْجِعُكُمْ
(is) your return
உங்கள் மீளுமிடம்
jamīʿan
جَمِيعًا
all
அனைவரும்
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
then He will inform you
ஆகவே அறிவிப்பான்/உங்களுக்கு
bimā
بِمَا
of what
எதை
kuntum
كُنتُمْ
you used to
இருந்தீர்கள்
taʿmalūna
تَعْمَلُونَ
do
செய்கிறீர்கள்

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo 'alaikum anfusakum laa yadurrukum man dalla izah tadaitum; ilal laahi marji'ukum jamee'an fayunabbi'ukum bimaa kuntum ta'maloon (QS. al-Māʾidah:105)

English Sahih International:

O you who have believed, upon you is [responsibility for] yourselves. Those who have gone astray will not harm you when you have been guided. To Allah is your return all together; then He will inform you of what you used to do. (QS. Al-Ma'idah, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தப்பிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கின்றது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழி சென்றால் வழிகெட்டவர் உங்களுக்கு தீங்கிழைக்கமாட்டார். உங்கள் அனைவருடைய மீளுமிடமும் அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது. ஆகவே, (அவன்) நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்.