Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௩

Qur'an Surah Al-Ma'idah Verse 103

ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا جَعَلَ اللّٰهُ مِنْۢ بَحِيْرَةٍ وَّلَا سَاۤىِٕبَةٍ وَّلَا وَصِيْلَةٍ وَّلَا حَامٍ ۙوَّلٰكِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَۗ وَاَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ (المائدة : ٥)

mā jaʿala
مَا جَعَلَ
Not has (been) made
ஏற்படுத்தவில்லை
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
min
مِنۢ
of
எதையும்
baḥīratin
بَحِيرَةٍ
a Bahirah
பஹீரா
walā sāibatin
وَلَا سَآئِبَةٍ
and not a Saibah
ஸாயிபா
walā waṣīlatin
وَلَا وَصِيلَةٍ
and not a Wasilah
வஸீலா
walā ḥāmin
وَلَا حَامٍۙ
and not a Hami
ஹறாம்
walākinna alladhīna
وَلَٰكِنَّ ٱلَّذِينَ
[And] but those who
எனினும்/எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தார்கள்
yaftarūna
يَفْتَرُونَ
they invent
கற்பனை செய்கின்றனர்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
against Allah
அல்லாஹ் மீது
l-kadhiba
ٱلْكَذِبَۖ
the lie
பொய்யை
wa-aktharuhum
وَأَكْثَرُهُمْ
and most of them
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿqilūna
لَا يَعْقِلُونَ
(do) not use reason
புரிய மாட்டார்கள்

Transliteration:

Maa ja'alal laahu mim baheeratinw wa laa saaa'ibatinw wa laa waseelatinw wa laa haaminw wa laakinnal lazeena kafaroo yaftaroona 'alallaahil kazib; wa aksaruhum laa ya'qiloon (QS. al-Māʾidah:103)

English Sahih International:

Allah has not appointed [such innovations as] bahirah or sa’ibah or wasilah or ham. But those who disbelieve invent falsehood about Allah, and most of them do not reason. (QS. Al-Ma'idah, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவைகளெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தியவைகளல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவைகள் என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு) கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர் மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனை செய்கின்றனர். அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.