وَلَوْ كَانُوْا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِيِّ وَمَآ اُنْزِلَ اِلَيْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِيَاۤءَ وَلٰكِنَّ كَثِيْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ٨١
- walaw kānū
- وَلَوْ كَانُوا۟
- அவர்கள் இருந்திருந்தால்
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்பவர்களாக
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wal-nabiyi
- وَٱلنَّبِىِّ
- இன்னும் நபியை
- wamā unzila
- وَمَآ أُنزِلَ
- எது / இறக்கப்பட்டது
- ilayhi
- إِلَيْهِ
- அவருக்கு
- mā
- مَا
- எடுத்திருக்க மாட்டார்கள்
- ittakhadhūhum
- ٱتَّخَذُوهُمْ
- எடுத்திருக்க மாட்டார்கள் அவர்களை
- awliyāa
- أَوْلِيَآءَ
- நண்பர்களாக
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- kathīran
- كَثِيرًا
- அதிகமானோர்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களில்
- fāsiqūna
- فَٰسِقُونَ
- பாவிகள்
அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு அருளப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகளாகவே இருக்கின்றனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௧)Tafseer
۞ لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْاۚ وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْٓا اِنَّا نَصٰرٰىۗ ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ ۔ ٨٢
- latajidanna
- لَتَجِدَنَّ
- (நீர்) காண்பீர்
- ashadda
- أَشَدَّ
- கடுமையானவர்களாக
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களில்
- ʿadāwatan
- عَدَٰوَةً
- பகைமையினால்
- lilladhīna
- لِّلَّذِينَ
- எவர்களுக்கு
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- l-yahūda
- ٱلْيَهُودَ
- யூதர்களை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்களை
- ashrakū
- أَشْرَكُوا۟ۖ
- இணைவைத்தனர்
- walatajidanna
- وَلَتَجِدَنَّ
- இன்னும் நிச்சயமாக காண்பீர்
- aqrabahum
- أَقْرَبَهُم
- அவர்களில் மிக நெருங்கியவர்களாக
- mawaddatan
- مَّوَدَّةً
- நேசத்தில்
- lilladhīna āmanū
- لِّلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களுக்கு
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- naṣārā
- نَصَٰرَىٰۚ
- கிறித்தவர்கள்
- dhālika
- ذَٰلِكَ
- அது
- bi-anna
- بِأَنَّ
- காரணம்/நிச்சயமாக
- min'hum
- مِنْهُمْ
- அவர்களில்
- qissīsīna
- قِسِّيسِينَ
- குருக்கள்
- waruh'bānan
- وَرُهْبَانًا
- இன்னும் துறவிகள்
- wa-annahum
- وَأَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- lā yastakbirūna
- لَا يَسْتَكْبِرُونَ
- பெருமை கொள்ள மாட்டார்கள்
(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீங்கள் காண்பீர்கள்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். அன்றி, அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௨)Tafseer
وَاِذَا سَمِعُوْا مَآ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّۚ يَقُوْلُوْنَ رَبَّنَآ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ ٨٣
- wa-idhā samiʿū
- وَإِذَا سَمِعُوا۟
- அவர்கள் செவியுற்றால்
- mā unzila
- مَآ أُنزِلَ
- எது/இறக்கப்பட்டது
- ilā l-rasūli
- إِلَى ٱلرَّسُولِ
- பக்கம்/தூதர்
- tarā
- تَرَىٰٓ
- காண்பீர்
- aʿyunahum
- أَعْيُنَهُمْ
- அவர்களின் கண்களை
- tafīḍu
- تَفِيضُ
- நிரம்பி வழியக்கூடியதாக
- mina l-damʿi
- مِنَ ٱلدَّمْعِ
- கண்ணீரால்
- mimmā ʿarafū
- مِمَّا عَرَفُوا۟
- எதன் காரணமாக/அறிந்தனர்
- mina l-ḥaqi
- مِنَ ٱلْحَقِّۖ
- உண்மையை
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகின்றனர்
- rabbanā
- رَبَّنَآ
- எங்கள் இறைவா
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- fa-uk'tub'nā
- فَٱكْتُبْنَا
- ஆகவே பதிவு செய்/எங்களை
- maʿa
- مَعَ
- உடன்
- l-shāhidīna
- ٱلشَّٰهِدِينَ
- சாட்சியாளர்கள்
தவிர, (இத்தகையவர்களில் பலர் நம்முடைய) தூதர் மீது அருளப்பட்டவைகளை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர்கள். அன்றி "எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௩)Tafseer
وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَاۤءَنَا مِنَ الْحَقِّۙ وَنَطْمَعُ اَنْ يُّدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِيْنَ ٨٤
- wamā lanā
- وَمَا لَنَا
- என்ன/எங்களுக்கு
- lā nu'minu
- لَا نُؤْمِنُ
- நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wamā
- وَمَا
- இன்னும் எது
- jāanā
- جَآءَنَا
- வந்தது நமக்கு
- mina l-ḥaqi
- مِنَ ٱلْحَقِّ
- சத்தியம்
- wanaṭmaʿu
- وَنَطْمَعُ
- நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும்
- an yud'khilanā
- أَن يُدْخِلَنَا
- எங்களை/அவன் சேர்ப்பதை
- rabbunā
- رَبُّنَا
- எங்கள் இறைவன்
- maʿa
- مَعَ
- உடன்
- l-qawmi
- ٱلْقَوْمِ
- மக்கள்
- l-ṣāliḥīna
- ٱلصَّٰلِحِينَ
- நல்லவர்கள்
"அன்றி, அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை கொள்கின்றோம்" என்றும் (கூறுகின்றனர்.) ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௪)Tafseer
فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ وَذٰلِكَ جَزَاۤءُ الْمُحْسِنِيْنَ ٨٥
- fa-athābahumu
- فَأَثَٰبَهُمُ
- ஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bimā
- بِمَا
- எதன் காரணமாக
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- jannātin
- جَنَّٰتٍ
- சொர்க்கங்களை
- tajrī
- تَجْرِى
- ஓடுகிறது
- min
- مِن
- இருந்து
- taḥtihā
- تَحْتِهَا
- அதன் கீழே
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமானவர்கள்
- fīhā
- فِيهَاۚ
- அதில்
- wadhālika
- وَذَٰلِكَ
- இது
- jazāu
- جَزَآءُ
- கூலி
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம்புரிபவர்களுடைய
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவைகளில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள். இதுவே நன்மை செய்பவர் களுக்குரிய கூலியாகும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௫)Tafseer
وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ ࣖ ٨٦
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- இன்னும் பொய்ப்பித்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- நம் வசனங்களை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- aṣḥābu l-jaḥīmi
- أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
- நரகவாசிகள்தான்
எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௬)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَآ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ۗاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ ٨٧
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā tuḥarrimū
- لَا تُحَرِّمُوا۟
- ஆகாதவையாக ஆக்காதீர்கள்
- ṭayyibāti
- طَيِّبَٰتِ
- நல்லவற்றை
- mā aḥalla
- مَآ أَحَلَّ
- எவை/ ஆகுமாக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- walā taʿtadū
- وَلَا تَعْتَدُوٓا۟ۚ
- இன்னும் வரம்புமீறாதீர்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-muʿ'tadīna
- ٱلْمُعْتَدِينَ
- வரம்புமீறிகளை
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவைகளை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி, நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௭)Tafseer
وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا ۖوَّاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ٨٨
- wakulū
- وَكُلُوا۟
- இன்னும் புசியுங்கள்
- mimmā
- مِمَّا
- எதிலிருந்து
- razaqakumu
- رَزَقَكُمُ
- வழங்கினான்/ உங்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ḥalālan
- حَلَٰلًا
- அனுமதிக்கப்பட்டதை
- ṭayyiban
- طَيِّبًاۚ
- நல்லது
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- இன்னும் அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- alladhī
- ٱلَّذِىٓ
- எவன்
- antum bihi
- أَنتُم بِهِۦ
- நீங்கள்/அவனை
- mu'minūna
- مُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்கிறீர்கள்
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௮)Tafseer
لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِيْٓ اَيْمَانِكُمْ وَلٰكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَۚ فَكَفَّارَتُهٗٓ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ ۗفَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ۗذٰلِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ۗوَاحْفَظُوْٓا اَيْمَانَكُمْ ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٨٩
- lā yuākhidhukumu
- لَا يُؤَاخِذُكُمُ
- தண்டிக்கமாட்டான் / உங்களை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bil-laghwi
- بِٱللَّغْوِ
- வீணானதற்காக
- fī aymānikum
- فِىٓ أَيْمَٰنِكُمْ
- சத்தியங்களில்/உங்கள்
- walākin yuākhidhukum
- وَلَٰكِن يُؤَاخِذُكُم
- எனினும்/உங்களைத் தண்டிப்பான்
- bimā
- بِمَا
- எதற்காக
- ʿaqqadttumu
- عَقَّدتُّمُ
- உறுதிப்படுத்தினீர்கள்
- l-aymāna
- ٱلْأَيْمَٰنَۖ
- சத்தியங்களை
- fakaffāratuhu
- فَكَفَّٰرَتُهُۥٓ
- அதற்குப் பரிகாரம்
- iṭ'ʿāmu
- إِطْعَامُ
- உணவளிப்பது
- ʿasharati
- عَشَرَةِ
- பத்து
- masākīna
- مَسَٰكِينَ
- ஏழைகளுக்கு
- min
- مِنْ
- இருந்து
- awsaṭi
- أَوْسَطِ
- நடுத்தரமானது
- mā tuṭ'ʿimūna
- مَا تُطْعِمُونَ
- எது/ உணவளிக்கிறீர்கள்
- ahlīkum
- أَهْلِيكُمْ
- உங்கள் குடும்பத்திற்கு
- aw
- أَوْ
- அல்லது
- kis'watuhum
- كِسْوَتُهُمْ
- அவர்களுக்கு ஆடையளிப்பது
- aw
- أَوْ
- அல்லது
- taḥrīru
- تَحْرِيرُ
- விடுதலையிடுவது
- raqabatin
- رَقَبَةٍۖ
- ஓர் அடிமை
- faman
- فَمَن
- எவர்
- lam yajid
- لَّمْ يَجِدْ
- பெறவில்லையெனில்
- faṣiyāmu
- فَصِيَامُ
- நோன்பிருத்தல்
- thalāthati
- ثَلَٰثَةِ
- மூன்று
- ayyāmin
- أَيَّامٍۚ
- நாட்களுக்கு
- dhālika
- ذَٰلِكَ
- இது
- kaffāratu
- كَفَّٰرَةُ
- பரிகாரம்
- aymānikum
- أَيْمَٰنِكُمْ
- உங்கள் சத்தியங்களின்
- idhā ḥalaftum
- إِذَا حَلَفْتُمْۚ
- நீங்கள் சத்தியம் செய்தால்
- wa-iḥ'faẓū
- وَٱحْفَظُوٓا۟
- காப்பாற்றுங்கள்
- aymānakum
- أَيْمَٰنَكُمْۚ
- உங்கள் சத்தியங்களை
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறு
- yubayyinu
- يُبَيِّنُ
- விவரிக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- தன் வசனங்களை
- laʿallakum tashkurūna
- لَعَلَّكُمْ تَشْكُرُونَ
- நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
உங்களின் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (யாதொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவைகளில் எதனையும்) எவரும் பெற்றிருக்காவிட்டால் அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன்னுடைய வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரி(த்து)க் (கூறு)கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௯)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ٩٠
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே!
- innamā l-khamru
- إِنَّمَا ٱلْخَمْرُ
- நிச்சயமாக மது
- wal-maysiru
- وَٱلْمَيْسِرُ
- இன்னும் சூது
- wal-anṣābu
- وَٱلْأَنصَابُ
- இன்னும் சிலைகள்
- wal-azlāmu
- وَٱلْأَزْلَٰمُ
- இன்னும் அம்புகள்
- rij'sun
- رِجْسٌ
- அருவருக்கத்தக்கவை
- min ʿamali
- مِّنْ عَمَلِ
- செயல்களில்
- l-shayṭāni
- ٱلشَّيْطَٰنِ
- ஷைத்தானின்
- fa-ij'tanibūhu
- فَٱجْتَنِبُوهُ
- ஆகவே, விட்டு விலகுங்கள்/இவற்றை
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- நீங்கள் வெற்றி பெறுவதற்காக
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறி கேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௯௦)Tafseer