Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௯

Qur'an Surah Al-Ahqaf Verse 9

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَآ اَدْرِيْ مَا يُفْعَلُ بِيْ وَلَا بِكُمْۗ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَيَّ وَمَآ اَنَا۠ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ (الأحقاف : ٤٦)

qul
قُلْ
Say
கூறுவீராக!
mā kuntu
مَا كُنتُ
"Not I am
நான் இருக்கவில்லை
bid'ʿan
بِدْعًا
a new (one)
புதுமையானவனாக
mina l-rusuli
مِّنَ ٱلرُّسُلِ
among the Messengers
தூதர்களில்
wamā adrī
وَمَآ أَدْرِى
and not I know
அறியமாட்டேன்
mā yuf'ʿalu
مَا يُفْعَلُ
what will be done
என்ன செய்யப்படும்
بِى
with me
எனக்கு
walā bikum
وَلَا بِكُمْۖ
and not with you
இன்னும் உங்களுக்கு
in attabiʿu
إِنْ أَتَّبِعُ
Not I follow
பின்பற்ற மாட்டேன்
illā
إِلَّا
but
தவிர
mā yūḥā
مَا يُوحَىٰٓ
what is revealed
எது/வஹீ அறிவிக்கப்படுகின்றது
ilayya
إِلَىَّ
to me
எனக்கு
wamā anā illā
وَمَآ أَنَا۠ إِلَّا
and not I am but
நான் இல்லை/தவிர
nadhīrun
نَذِيرٌ
a warner
எச்சரிப்பாளராகவே
mubīnun
مُّبِينٌ
clear"
தெளிவான

Transliteration:

Qul maa kuntu bid'am minal Rusuli wa maaa adreee ma yuf'alu bee wa laa bikum in attabi'u illaa maa yoohaaa ilaiya ya maaa ana illaa nazeerum mubeen (QS. al-ʾAḥq̈āf:9)

English Sahih International:

Say, "I am not something original among the messengers, nor do I know what will be done with me or with you. I only follow that which is revealed to me, and I am not but a clear warner." (QS. Al-Ahqaf, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி, பின்னும்) நீங்கள் கூறுங்கள்: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) அன்றி, என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹீ மூலமாக அறிவிக்கப்பட்டவைகளை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை. (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௯)

Jan Trust Foundation

“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. எனக்கு என்ன செய்யப்படும் உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகின்றதோ அதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை.