குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௮
Qur'an Surah Al-Ahqaf Verse 8
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۗ قُلْ اِنِ افْتَرَيْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِيْ مِنَ اللّٰهِ شَيْـًٔا ۗهُوَ اَعْلَمُ بِمَا تُفِيْضُوْنَ فِيْهِۗ كَفٰى بِهٖ شَهِيْدًا ۢ بَيْنِيْ وَبَيْنَكُمْ ۗ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ (الأحقاف : ٤٦)
- am yaqūlūna
- أَمْ يَقُولُونَ
- Or they say
- கூறுகிறார்களா?
- if'tarāhu
- ٱفْتَرَىٰهُۖ
- "He has invented it"
- இவர் இதை இட்டுக்கட்டினார்
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- ini if'taraytuhu
- إِنِ ٱفْتَرَيْتُهُۥ
- "If I have invented it
- நான் இதை இட்டுக்கட்டி இருந்தால்
- falā tamlikūna
- فَلَا تَمْلِكُونَ
- then not you have power
- நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள்
- lī
- لِى
- for me
- எனக்காக
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ்விடமிருந்து
- shayan
- شَيْـًٔاۖ
- anything
- எதையும்
- huwa
- هُوَ
- He
- அவன்
- aʿlamu
- أَعْلَمُ
- knows best
- மிக அறிந்தவன்
- bimā tufīḍūna
- بِمَا تُفِيضُونَ
- of what you utter
- எதை/நீங்கள் ஈடுபடுகிறீர்களோ
- fīhi
- فِيهِۖ
- concerning it
- அதில்
- kafā
- كَفَىٰ
- Sufficient is He
- போதுமானவன்
- bihi
- بِهِۦ
- Sufficient is He
- அவனே
- shahīdan
- شَهِيدًۢا
- (as) a Witness
- சாட்சியால்
- baynī
- بَيْنِى
- between me
- எனக்கு மத்தியிலும்
- wabaynakum
- وَبَيْنَكُمْۖ
- and between you
- உங்களுக்கு மத்தியிலும்
- wahuwa
- وَهُوَ
- and He
- அவன்தான்
- l-ghafūru
- ٱلْغَفُورُ
- (is) the Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Am yaqooloonaf taraahu qul inif taraituhoo falaa tamlikoona lee minal laahi shai'an Huwa a'lamu bimaa tufeedoona feehi kafaa bihee shaheedam bainee wa bainakum wa Huwal Ghafoorur Raheem(QS. al-ʾAḥq̈āf:8)
English Sahih International:
Or do they say, "He has invented it"? Say, "If I have invented it, you will not possess for me [the power of protection] from Allah at all. He is most knowing of that in which you are involved. Sufficient is He as Witness between me and you, and He is the Forgiving, the Merciful." (QS. Al-Ahqaf, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர்கள் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதனை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு யாதொன்றும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகின்றீர்களோ, அவைகளை அவன் நன்கறிந்துமிருக்கின்றான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான். அவன் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௮)
Jan Trust Foundation
அல்லது, “இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக| “நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்” என்று (நபியே! நீர் கூறும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதை இவர் (-நமது தூதர்) இட்டுக்கட்டினார் என்று கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் (அதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கும் போது) அல்லாஹ்விடமிருந்து எனக்காக எதையும் (பரிந்துரை செய்ய) நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள். நீங்கள் எதில் ஈடுபடுகிறீர்களோ அதை அவன் மிக அறிந்தவன் ஆவான். எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அவனே சாட்சியால் போதுமானவன். அவன்தான் மகா மன்னிப்பாளன் மகா கருணையாளன் ஆவான்.