Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௬

Qur'an Surah Al-Ahqaf Verse 6

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَاۤءً وَّكَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِيْنَ (الأحقاف : ٤٦)

wa-idhā ḥushira
وَإِذَا حُشِرَ
And when are gathered
எழுப்பப்படும் போது
l-nāsu
ٱلنَّاسُ
the people
மக்கள்
kānū
كَانُوا۟
they will be
ஆகிவிடுவார்கள்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
aʿdāan
أَعْدَآءً
enemies
எதிரிகளாக
wakānū
وَكَانُوا۟
and they will be
இன்னும் ஆகிவிடுவார்கள்
biʿibādatihim
بِعِبَادَتِهِمْ
of their worship
அவர்கள் தங்களை வணங்கியதை
kāfirīna
كَٰفِرِينَ
deniers
மறுப்பவர்களாக

Transliteration:

Wa izaa hushiran naasu kaanoo lahum a'daaa'anw wa kaanoo bi'ibaadatihim kaafireen (QS. al-ʾAḥq̈āf:6)

English Sahih International:

And when the people are gathered [that Day], they [who were invoked] will be enemies to them, and they will be deniers of their worship. (QS. Al-Ahqaf, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவைகள்) நிராகரித்துவிடும். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௬)

Jan Trust Foundation

அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்கள் எழுப்பப்படும்போது அவர்கள் (-வணங்கப்பட்டவர்கள்) அவர்களுக்கு (-வணங்கியவர்களுக்கு) எதிரிகளாக ஆகிவிடுவார்கள். இன்னும், அவர்கள் (-மக்கள்) தங்களை வணங்கியதை மறுப்பவர்களாக ஆகிவிடுவார்கள்.