Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௩௫

Qur'an Surah Al-Ahqaf Verse 35

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ ۗ كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُوْنَۙ لَمْ يَلْبَثُوْٓا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ۗ بَلٰغٌ ۚفَهَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ ࣖ (الأحقاف : ٤٦)

fa-iṣ'bir
فَٱصْبِرْ
So be patient
பொறுமை காப்பீராக!
kamā ṣabara
كَمَا صَبَرَ
as had patience
பொறுத்தது போன்று
ulū l-ʿazmi
أُو۟لُوا۟ ٱلْعَزْمِ
those of determination those of determination
மிகவும் வீரமிக்கவர்கள்
mina l-rusuli
مِنَ ٱلرُّسُلِ
of the Messengers
தூதர்களில்
walā tastaʿjil lahum
وَلَا تَسْتَعْجِل لَّهُمْۚ
and (do) not seek to hasten for them
அவர்களுக்காக அவசரமாகக் கேட்காதீர்!
ka-annahum
كَأَنَّهُمْ
As if they had
அவர்களுக்குத் தோன்றும்
yawma
يَوْمَ
(the) Day
நாளில்
yarawna
يَرَوْنَ
they see
அவர்கள் பார்க்கின்ற(னர்)
mā yūʿadūna
مَا يُوعَدُونَ
what they were promised
அவர்கள் எச்சரிக்கப்பட்டதை
lam yalbathū
لَمْ يَلْبَثُوٓا۟
not remained
அவர்கள் தங்கவில்லை
illā sāʿatan
إِلَّا سَاعَةً
except an hour
சில மணிநேரம் தவிர
min nahārin
مِّن نَّهَارٍۭۚ
of a day
பகலின்
balāghun
بَلَٰغٌۚ
A clear Message
இது எடுத்து சொல்லப்படும் செய்தியாகும்
fahal yuh'laku
فَهَلْ يُهْلَكُ
But will (any) be destroyed
அழிக்கப்படுவார்களா?
illā l-qawmu
إِلَّا ٱلْقَوْمُ
except the people
மக்களைத் தவிர
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
the defiantly disobedient?
பாவிகளான

Transliteration:

Fasbir kamaa sabara ulul 'azmi minar Rusuli wa laa tasta'jil lahum; ka annahum Yawma yarawna maa yoo'adoona lam yalbasooo illaa saa'atam min nahaar; balaagh; fahal yuhlaku illal qawmul faasiqoon (QS. al-ʾAḥq̈āf:35)

English Sahih International:

So be patient, [O Muhammad], as were those of determination among the messengers and do not be impatient for them. It will be – on the Day they see that which they are promised – as though they had not remained [in the world] except an hour of a day. [This is] notification. And will [any] be destroyed except the defiantly disobedient people? (QS. Al-Ahqaf, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நம்முடைய தூதர்களிலுள்ள வீரர்கள் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீங்களும் சகித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள். அவர்களுக்கு (வேதனையை) நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) ஒரு பகலில் ஒரு நாழிகையே தவிர (அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதனை) அவர்களுக்கு (நீங்கள்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை.) (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௩௫)

Jan Trust Foundation

“(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தூதர்களில் மிகவும் வீரமிக்கவர்கள் (-மிக உறுதியுடையவர்கள்) பொறுத்தது போன்று (நபியே!) நீரும் பொறுமை காப்பீராக! அவர்களுக்காக (- நிராகரிப்பாளர்களுக்காக வேதனையை) அவசரமாக கேட்காதீர்! அவர்கள் எச்சரிக்கப்பட்டதை அவர்கள் பார்க்கின்ற நாளில் பகலில் சில மணிநேரம் தவிர அவர்கள் (இவ்வுலகில்) தங்கவில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். இது (-இந்த குர்ஆன்) எடுத்து சொல்லப்படும் செய்தியாகும். (அல்லாஹ்வின் தண்டனை வரும்போது) பாவிகளான மக்களைத் தவிர மற்றவர்கள் அழிக்கப்படுவார்களா? (இல்லை, பாவிகள்தான் அழிக்கப்படுவார்கள்.)