குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௩௪
Qur'an Surah Al-Ahqaf Verse 34
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِۗ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّ ۗ قَالُوْا بَلٰى وَرَبِّنَا ۗقَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ (الأحقاف : ٤٦)
- wayawma
- وَيَوْمَ
- And (the) Day
- நாளில்
- yuʿ'raḍu
- يُعْرَضُ
- are exposed
- கொண்டுவரப்படும்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieved
- நிராகரித்தவர்கள்
- ʿalā l-nāri
- عَلَى ٱلنَّارِ
- to the Fire
- நரகத்தின் முன்
- alaysa
- أَلَيْسَ
- "Is not
- இல்லையா?
- hādhā
- هَٰذَا
- this
- இது
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۖ
- the truth?"
- உண்மையாக
- qālū
- قَالُوا۟
- They will say
- அவர்கள் கூறுவார்கள்
- balā
- بَلَىٰ
- "Yes
- ஏன் இல்லை?
- warabbinā
- وَرَبِّنَاۚ
- by our Lord"
- எங்கள் இறைவன் மீது சத்தியமாக
- qāla
- قَالَ
- He will say
- கூறுவான்
- fadhūqū
- فَذُوقُوا۟
- "Then taste
- நீங்கள் சுவையுங்கள்!
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- இந்த வேதனையை
- bimā kuntum
- بِمَا كُنتُمْ
- because you used (to)
- நீங்கள் இருந்த காரணத்தால்
- takfurūna
- تَكْفُرُونَ
- disbelieve"
- நிராகரிப்பவர்களாக
Transliteration:
Wa Yawma yu'radul lazeena kafaroo 'alan naari alaisa haaza bil haqq; qaaloo balaa wa Rabbinaa; qaala fazooqul 'azaaba bimaa kuntum takfuroon(QS. al-ʾAḥq̈āf:34)
English Sahih International:
And the Day those who disbelieved are exposed to the Fire [it will be said], "Is this not the truth?" They will say, "Yes, by our Lord." He will say, "Then taste the punishment for what you used to deny." (QS. Al-Ahqaf, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
நிராகரிப்பவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) "இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் "எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்" என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) "நீங்கள் இதனை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருங்கள்" என்று கூறுவான். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௩௪)
Jan Trust Foundation
மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) “இது உண்மையல்லவா?” (என்று கேட்கப்படும்;) அதற்கவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்” என்று கூறுவார்கள். “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்” என்று அவன் கூறுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில், நிராகரித்தவர்கள் நரகத்தின் முன் கொண்டுவரப்படும் (அவர்களுக்கு கூறப்படும்): “இது உண்மையாக இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை?” எங்கள் இறைவன் மீது சத்தியமாக (இது உண்மைதான்)” (அல்லாஹ்) கூறுவான்: “நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் இந்த வேதனையை நீங்கள் சுவையுங்கள்!”