Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௩௨

Qur'an Surah Al-Ahqaf Verse 32

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ لَّا يُجِبْ دَاعِيَ اللّٰهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِى الْاَرْضِ وَلَيْسَ لَهٗ مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءُ ۗ اُولٰۤىِٕكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (الأحقاف : ٤٦)

waman
وَمَن
And whoever
எவர்
lā yujib
لَّا يُجِبْ
(does) not respond
பதில் தரவில்லையோ
dāʿiya
دَاعِىَ
(to the) caller
அழைப்பாளருக்கு
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
falaysa bimuʿ'jizin
فَلَيْسَ بِمُعْجِزٍ
then not he can escape
அவர் தப்பித்துவிட மாட்டார்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
walaysa
وَلَيْسَ
and not
இல்லை
lahu
لَهُۥ
for him
அவருக்கு
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
awliyāu
أَوْلِيَآءُۚ
protectors
பாதுகாவலர்கள்
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
இப்படிப்பட்டவர்கள்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
(are) in error
வழிகேட்டில் இருக்கின்றனர்
mubīnin
مُّبِينٍ
clear"
மிகத் தெளிவான

Transliteration:

Wa mal laa yujib daa'iyal laahi falaisa bimu'jizin fil ardi wa laisa lahoo min dooniheee awliyaaa'; ulaaa ika fee dalaalim mubeen (QS. al-ʾAḥq̈āf:32)

English Sahih International:

But he who does not respond to the Caller of Allah will not cause failure [to Him] upon earth, and he will not have besides Him any protectors. Those are in manifest error." (QS. Al-Ahqaf, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடிய போதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை யன்றி, அவனுக்கு பாதுகாப்பவர் ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர்" என்றார்கள். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௩௨)

Jan Trust Foundation

“ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது; அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தரவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வின் பிடியை விட்டு எங்கும்) தப்பித்துவிட மாட்டார். அவனை அன்றி அவருக்கு பாதுகாவலர்கள் இல்லை. இப்படிப்பட்டவர்கள் மிகத் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றனர்.