குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௯
Qur'an Surah Al-Ahqaf Verse 29
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ صَرَفْنَآ اِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْٓا اَنْصِتُوْاۚ فَلَمَّا قُضِيَ وَلَّوْا اِلٰى قَوْمِهِمْ مُّنْذِرِيْنَ (الأحقاف : ٤٦)
- wa-idh ṣarafnā ilayka
- وَإِذْ صَرَفْنَآ إِلَيْكَ
- And when We directed to you
- நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக!/உம் பக்கம்
- nafaran
- نَفَرًا
- a party
- சில நபர்களை
- mina l-jini
- مِّنَ ٱلْجِنِّ
- of the jinn
- ஜின்களின்
- yastamiʿūna
- يَسْتَمِعُونَ
- listening
- செவிமடுக்கின்றனர்
- l-qur'āna
- ٱلْقُرْءَانَ
- (to) the Quran
- குர்ஆனை
- falammā ḥaḍarūhu
- فَلَمَّا حَضَرُوهُ
- And when they attended it
- அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது
- qālū
- قَالُوٓا۟
- they said
- கூறினார்கள்
- anṣitū
- أَنصِتُوا۟ۖ
- "Listen quietly"
- வாய்மூடி இருங்கள்!
- falammā quḍiya
- فَلَمَّا قُضِىَ
- And when it was concluded
- முடிக்கப்பட்ட போது
- wallaw
- وَلَّوْا۟
- they turned back
- திரும்பினார்கள்
- ilā qawmihim
- إِلَىٰ قَوْمِهِم
- to their people
- தங்களது சமுதாயத்தினர் பக்கம்
- mundhirīna
- مُّنذِرِينَ
- (as) warners
- எச்சரிப்பவர்களாக
Transliteration:
Wa iz sarafinaaa ilaika nafaram minal jinni yastami'oonal Quraana falammaa hadaroohu qaalooo ansitoo falammaa qudiya wallaw ilaa qawmihim munzireen(QS. al-ʾAḥq̈āf:29)
English Sahih International:
And [mention, O Muhammad], when We directed to you a few of the jinn, listening to the Quran. And when they attended it, they said, "Listen attentively." And when it was concluded, they went back to their people as warners. (QS. Al-Ahqaf, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) "நீங்கள் வாய் பொத்தி (இதனைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்" என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௯)
Jan Trust Foundation
மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, “மௌனமாக இருங்கள்” என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஜின்களின் சில நபர்களை உம் பக்கம் நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக! அவர்கள் (நீர் ஓதுகின்ற) குர்ஆனை செவிமடுக்கின்றனர். அவர்கள் அந்த இடத்திற்கு வந்த போது, வாய்மூடி இருங்கள்! என்று (தங்களுக்குள்) கூறினார்கள். (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்ட போது அவர்கள் தங்களது சமுதாயத்தினர் பக்கம் (அவர்களை) எச்சரிப்பவர்களாகத் திரும்பினார்கள்.