Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௮

Qur'an Surah Al-Ahqaf Verse 28

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ۗبَلْ ضَلُّوْا عَنْهُمْۚ وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا يَفْتَرُوْنَ (الأحقاف : ٤٦)

falawlā naṣarahumu
فَلَوْلَا نَصَرَهُمُ
Then why (did) not help them
(அவர்கள்) இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா?
alladhīna ittakhadhū
ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟
those whom they had taken
எவர்களை/எடுத்துக் கொண்டார்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
qur'bānan
قُرْبَانًا
gods as a way of approach?
வழிபாட்டுக்காக
ālihatan
ءَالِهَةًۢۖ
gods as a way of approach?
தெய்வங்களாக
bal
بَلْ
Nay
மாறாக
ḍallū
ضَلُّوا۟
they were lost
அவர்கள் மறைந்து விட்டனர்
ʿanhum
عَنْهُمْۚ
from them
இவர்களை விட்டு
wadhālika
وَذَٰلِكَ
And that
இது
if'kuhum
إِفْكُهُمْ
(was) their falsehood
இவர்களின்பொய்(யும்)
wamā kānū
وَمَا كَانُوا۟
and what they were
இன்னும் எதை/இருந்தார்களோ
yaftarūna
يَفْتَرُونَ
inventing
இட்டுக் கட்டுபவர்களாக

Transliteration:

Falaw laa nasarahumul lazeenat takhazoo min doonil laahi qurbaanan aalihatam bal dalloo 'anhum' wa zaalika ifkuhum wa maa kaanoo yaftaroon (QS. al-ʾAḥq̈āf:28)

English Sahih International:

Then why did those they took besides Allah as deities by which to approach [Him] not aid them? But they had strayed [i.e., departed] from them. And that was their falsehood and what they were inventing. (QS. Al-Ahqaf, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவைகளை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவைகளேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவைகளெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவைகளெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைகள்தாம் (என்று தெளிவாகி விட்டது). (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியவையும், இட்டுக் கட்டியவையுமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அன்றி இவர்கள் வழிபாட்டுக்காக எவர்களை தெய்வங்களாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? மாறாக, அவர்கள் (-தெய்வங்கள்) இவர்களை (-வணங்கியவர்களை) விட்டு மறைந்து விட்டனர். இது (-சிலை வணக்க வழிபாடு) இவர்களின் பொய்யும் இன்னும் இவர்கள் (எதை) இட்டுக் கட்டுபவர்களாக இருந்தார்களோ அதுவுமாகும். (பல தெய்வ வழிபாடும் சிலை வழிபாடுகளும் மனிதர்கள் பொய்யாக இட்டுக்கட்டியதும் அவர்கள் கற்பனை செய்ததும்தான். அவற்றுக்கு எவ்வித உண்மை ஆதாரம் இல்லை.)