குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௭
Qur'an Surah Al-Ahqaf Verse 27
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِّنَ الْقُرٰى وَصَرَّفْنَا الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ (الأحقاف : ٤٦)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- ahlaknā
- أَهْلَكْنَا
- We destroyed
- நாம் அழித்தோம்
- mā ḥawlakum
- مَا حَوْلَكُم
- what surrounds you
- உங்களை சுற்றி உள்ளவற்றை
- mina l-qurā
- مِّنَ ٱلْقُرَىٰ
- of the towns
- ஊர்களில்
- waṣarrafnā
- وَصَرَّفْنَا
- and We have diversified
- இன்னும் நாம் விவரித்தோம்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- the Signs
- அத்தாட்சிகளை
- laʿallahum yarjiʿūna
- لَعَلَّهُمْ يَرْجِعُونَ
- that they may return
- அவர்கள் திரும்புவதற்காக
Transliteration:
Wa laqad ahlaknaa ma hawlakum minal quraa wa sarrafnal Aayaati la'allahum yarji'oon(QS. al-ʾAḥq̈āf:27)
English Sahih International:
And We have already destroyed what surrounds you of [those] cities, and We have diversified the signs [or verses] that perhaps they might return [from disbelief]. (QS. Al-Ahqaf, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன்பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவைகளை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்.) (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௭)
Jan Trust Foundation
அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஊர்களில் உங்களை சுற்றி உள்ளவற்றை நாம் திட்டவட்டமாக அழித்தோம். அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் விவரித்தோம்.