குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௬
Qur'an Surah Al-Ahqaf Verse 26
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِيْمَآ اِنْ مَّكَّنّٰكُمْ فِيْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةًۖ فَمَآ اَغْنٰى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَآ اَبْصَارُهُمْ وَلَآ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَيْءٍ اِذْ كَانُوْا يَجْحَدُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ࣖ (الأحقاف : ٤٦)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- makkannāhum
- مَكَّنَّٰهُمْ
- We had established them
- அவர்களுக்கு நாம் வசதியளித்தோம்
- fīmā
- فِيمَآ
- in what
- எதில்
- in makkannākum
- إِن مَّكَّنَّٰكُمْ
- not We have established you
- உங்களுக்கு நாம் வசதியளிக்கவில்லை(யோ)
- fīhi
- فِيهِ
- in it
- அதில்
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- and We made
- இன்னும் ஏற்படுத்தினோம்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- samʿan
- سَمْعًا
- hearing
- செவியை(யும்)
- wa-abṣāran
- وَأَبْصَٰرًا
- and vision
- பார்வைகளையும்
- wa-afidatan
- وَأَفْـِٔدَةً
- and hearts
- உள்ளங்களையும்
- famā aghnā
- فَمَآ أَغْنَىٰ
- But not availed
- தடுக்கவில்லை
- ʿanhum
- عَنْهُمْ
- them
- அவர்களை விட்டும்
- samʿuhum
- سَمْعُهُمْ
- their hearing
- அவர்களின் செவி(யும்)
- walā
- وَلَآ
- and not
- பார்வைகளும்
- abṣāruhum
- أَبْصَٰرُهُمْ
- their vision
- பார்வைகளும் அவர்களின்
- walā afidatuhum
- وَلَآ أَفْـِٔدَتُهُم
- and not their hearts
- அவர்களின் உள்ளங்களும்
- min shayin
- مِّن شَىْءٍ
- any thing
- எதையும்
- idh kānū
- إِذْ كَانُوا۟
- when they were
- அவர்கள் இருந்தபோது
- yajḥadūna
- يَجْحَدُونَ
- rejecting
- மறுப்பவர்களாக
- biāyāti
- بِـَٔايَٰتِ
- (the) Signs
- அத்தாட்சிகளை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- waḥāqa
- وَحَاقَ
- and enveloped
- இன்னும் சூழ்ந்து கொண்டது
- bihim
- بِهِم
- them
- அவர்களை
- mā kānū
- مَّا كَانُوا۟
- what they used (to)
- எது/இருந்தார்கள்
- bihi
- بِهِۦ
- [at it]
- அதை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- ridicule
- பரிகாசம் செய்பவர்களாக
Transliteration:
Wa laqad makkannaahum feemaaa im makkannaakum feehi waj'alnaa lahum sam'anw wa absaaranw wa af'idatan famaaa aghnaa 'anhum samu'uhum wa laaa absaaruhum wa laaa af'idatuhum min shai'in iz kaanoo yajhadoona bi Aayaatil laahi wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon(QS. al-ʾAḥq̈āf:26)
English Sahih International:
And We had certainly established them in such as We have not established you, and We made for them hearing and vision and hearts [i.e., intellect]. But their hearing and vision and hearts availed them not from anything [of the punishment] when they were [continually] rejecting the signs of Allah; and they were enveloped by what they used to ridicule. (QS. Al-Ahqaf, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். அன்றி, நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வினுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது. (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௬)
Jan Trust Foundation
உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்கு நாம் எதில் வசதியளிக்கவில்லையோ அதில் (எல்லாம்) அவர்களுக்கு நாம் வசதியளித்தோம். இன்னும், அவர்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தபோது அவர்களின் செவியும் அவர்களின் பார்வைகளும் அவர்களின் உள்ளங்களும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்கவில்லை. அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தார்களோ அது (-அல்லாஹ்வின் தண்டனை) அவர்களை சூழ்ந்து கொண்டது.