Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௫

Qur'an Surah Al-Ahqaf Verse 25

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تُدَمِّرُ كُلَّ شَيْءٍۢ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰىٓ اِلَّا مَسٰكِنُهُمْۗ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ (الأحقاف : ٤٦)

tudammiru
تُدَمِّرُ
Destroying
இது சின்னா பின்னமாக்கிவிடும்
kulla shayin
كُلَّ شَىْءٍۭ
every thing
எல்லாவற்றையும்
bi-amri
بِأَمْرِ
by (the) command
கட்டளைப்படி
rabbihā
رَبِّهَا
(of) its Lord
தனது இறைவனின்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
Then they became (such)
ஆகிவிட்டனர்
lā yurā
لَا يُرَىٰٓ
not is seen
பார்க்க முடியாதபடி
illā
إِلَّا
except
தவிர
masākinuhum
مَسَٰكِنُهُمْۚ
their dwellings
அவர்களின் வசிப்பிடங்களை
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
We recompense
கூலி கொடுப்போம்
l-qawma
ٱلْقَوْمَ
the people
மக்களுக்கு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
[the] criminals
குற்றவாளிகளான

Transliteration:

Tudammiru kulla shai'im bi-amri Rabbihaa fa asbahoo laa yuraaa illaa masaakinuhum; kazaalika najzil qawmal mujrimeen (QS. al-ʾAḥq̈āf:25)

English Sahih International:

Destroying everything by command of its Lord. And they became so that nothing was seen [of them] except their dwellings. Thus do We recompense the criminal people. (QS. Al-Ahqaf, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௫)

Jan Trust Foundation

“அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது தனது இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் சின்னாபின்ன மாக்கிவிடும் (நாசமாக்கிவிடும்). அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர (வேறு எதையும்) பார்க்க முடியாதபடி அவர்கள் ஆகிவிட்டனர். (அவர்கள் எல்லோரும் அழிந்துவிட்டனர். அவர்கள் வசித்த வீடுகளின் இடிபாடுகள் மட்டும் மிஞ்சி இருக்கின்றன.) இவ்வாறுதான் குற்றவாளிகளான மக்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.