Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௪

Qur'an Surah Al-Ahqaf Verse 24

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ۗبَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ۗرِيْحٌ فِيْهَا عَذَابٌ اَلِيْمٌۙ (الأحقاف : ٤٦)

falammā ra-awhu
فَلَمَّا رَأَوْهُ
Then when they saw it
அவர்கள் அதை பார்த்த போது
ʿāriḍan
عَارِضًا
(as) a cloud
அடர்த்தியான கார் மேகமாக
mus'taqbila
مُّسْتَقْبِلَ
approaching
முன்னோக்கி வரக்கூடிய(து)
awdiyatihim
أَوْدِيَتِهِمْ
their valleys
தங்களது பள்ளத்தாக்கை
qālū
قَالُوا۟
they said
கூறினார்கள்
hādhā
هَٰذَا
"This
இது
ʿāriḍun
عَارِضٌ
(is) a cloud
அடர்த்தியான கார்மேகமாகும்
mum'ṭirunā
مُّمْطِرُنَاۚ
bringing us rain"
நமக்கு மழை பொழிவிக்கும்
bal huwa
بَلْ هُوَ
Nay it
மாறாக இது
mā is'taʿjaltum
مَا ٱسْتَعْجَلْتُم
(is) what you were asking it to be hastened
எதை/நீங்கள் அவசரமாகத் தேடினீர்கள்
bihi
بِهِۦۖ
you were asking it to be hastened
அதை
rīḥun
رِيحٌ
a wind
(இது) ஒரு காற்றாகும்
fīhā
فِيهَا
in it
இதில் உள்ளது
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
தண்டனை
alīmun
أَلِيمٌ
painful
வலி தரக்கூடிய(து)

Transliteration:

Falammaa ra awhu 'aaridam mustaqbila awdiyatihim qaaloo haazaa 'aaridum mumtirunaa; bal huwa masta'jaltum bihee reehun feehaa 'azaabun aleem (QS. al-ʾAḥq̈āf:24)

English Sahih International:

And when they saw it as a cloud approaching their valleys, they said, "This is a cloud bringing us rain!" Rather, it is that for which you were impatient: a wind, within it a painful punishment, (QS. Al-Ahqaf, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, "இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்" என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) "அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது" (என்றும் கூறப்பட்டது). (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௪)

Jan Trust Foundation

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அதை (-அல்லாஹ்வின் வேதனையை) தங்களது பள்ளத் தாக்கை முன்னோக்கி வரக்கூடிய அடர்த்தியான கார் மேகமாக பார்த்தபோது, கூறினார்கள்: “இது நமக்கு மழை பொழிவிக்கும் அடர்த்தியான கார் மேகமாகும்.” (ஆது நபி கூறினார்: இது மழை பொழியும் மேகம் இல்லை) மாறாக, இது நீங்கள் எதை அவசரமாகத் தேடினீர்களோ அதுவாகும். இது ஒரு காற்றாகும். இதில் வலி தரக்கூடிய தண்டனை இருக்கிறது.