Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௩

Qur'an Surah Al-Ahqaf Verse 23

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۖوَاُبَلِّغُكُمْ مَّآ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّيْٓ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ (الأحقاف : ٤٦)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
innamā l-ʿil'mu
إِنَّمَا ٱلْعِلْمُ
"Only the knowledge
அறிவெல்லாம்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
(is) with Allah (is) with Allah
அல்லாஹ்விடம்தான் இருக்கிறது.
wa-uballighukum
وَأُبَلِّغُكُم
and I convey to you
உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்
mā ur'sil'tu
مَّآ أُرْسِلْتُ
what I am sent
எதை/அனுப்பப்பட்டேன்
bihi
بِهِۦ
with it
அதைக் கொண்டு
walākinnī
وَلَٰكِنِّىٓ
but
என்றாலும் நான்
arākum
أَرَىٰكُمْ
I see you
உங்களை கருதுகிறேன்
qawman
قَوْمًا
a people
மக்களாக
tajhalūna
تَجْهَلُونَ
ignorant"
நீங்கள் அறியாத(வர்கள்)

Transliteration:

Qaala innamal 'ilmu indal laahi wa uballighukum maaa uriltu bihee wa laakinneee araakum qawman tajhaloon (QS. al-ʾAḥq̈āf:23)

English Sahih International:

He said, "Knowledge [of its time] is only with Allah, and I convey to you that with which I was sent; but I see you [to be] a people behaving ignorantly." (QS. Al-Ahqaf, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

அதற்கவர், (அவர்களை நோக்கி "உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற ஞான விஷயம்) எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றன. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதனையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகின்றேன்" என்று கூறினார். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௩)

Jan Trust Foundation

அதற்கவர்| “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: (உங்கள் முடிவைப் பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். என்றாலும், நீங்கள் அறியாத மக்களாக இருப்பதாகவே நான் உங்களை கருதுகிறேன்.