Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௧

Qur'an Surah Al-Ahqaf Verse 21

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاذْكُرْ اَخَا عَادٍۗ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖٓ اَلَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۗاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ (الأحقاف : ٤٦)

wa-udh'kur
وَٱذْكُرْ
And mention
நினைவு கூர்வீராக
akhā
أَخَا
(the) brother
சகோதரரை
ʿādin
عَادٍ
(of) Aad
ஆது சமுதாயத்தின்
idh andhara
إِذْ أَنذَرَ
when he warned
அவர் எச்சரித்த சமயத்தை
qawmahu
قَوْمَهُۥ
his people
தனது மக்களை
bil-aḥqāfi
بِٱلْأَحْقَافِ
in the Al-Ahqaf
மணல் பாங்கான இடத்தில்
waqad
وَقَدْ
and had already passed away
திட்டமாக
khalati
خَلَتِ
and had already passed away
சென்றுள்ளனர்
l-nudhuru
ٱلنُّذُرُ
[the] warners
எச்சரிப்பாளர்கள்
min bayni yadayhi
مِنۢ بَيْنِ يَدَيْهِ
before him before him before him
இவருக்கு முன்னரும்
wamin khalfihi
وَمِنْ خَلْفِهِۦٓ
and after him and after him
இவருக்கு பின்னரும்
allā taʿbudū
أَلَّا تَعْبُدُوٓا۟
"That not you worship
நீங்கள் வணங்காதீர்கள்
illā l-laha
إِلَّا ٱللَّهَ
except Allah
அல்லாஹ்வை அன்றி
innī
إِنِّىٓ
Indeed, I
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
[I] fear
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
for you
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
a punishment
தண்டனையை
yawmin
يَوْمٍ
(of) a Day
நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
Great"
பெரிய(து)

Transliteration:

Wazkur akhaa 'Aad, iz anzara qawmahoo bil Ahqaafi wa qad khalatin nuzuru mim baini yadaihi wa min khalfiheee allaa ta'budooo illal laaha inneee akhaafu 'alaikum 'azaaba Yawmin 'azeem (QS. al-ʾAḥq̈āf:21)

English Sahih International:

And mention, [O Muhammad], the brother of Aad, when he warned his people in [the region of] al-Ahqaf – and warners had already passed on before him and after him – [saying], "Do not worship except Allah. Indeed, I fear for you the punishment of a terrible day." (QS. Al-Ahqaf, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் (ஹூத் நபியாகிய) "ஆது" உடைய சகோதரரை நினைத்துப் பாருங்கள். அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். தன்னுடைய மக்களை (அவர்) "அஹ்காஃப்" என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து அவர்களை நோக்கி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்து "அல்லாஹ்வையன்றி (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். (வணங்கினால்,) நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகின்றேன்" (என்றார்). (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௧)

Jan Trust Foundation

மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூத்) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ஆது சமுதாயத்தின் சகோதரரை (நபி ஹூதை) நினைவு கூர்வீராக! அவர் தனது மக்களை மணல் பாங்கான இடத்தில் (உள்ள அவர்களது இல்லங்களுக்கு அருகில் வைத்து) எச்சரித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இவருக்கு முன்னரும் இவருக்குப் பின்னரும் எச்சரிப்பாளர்கள் திட்டமாக சென்றுள்ளனர். (அவர் எச்சரித்து கூறியதாவது:) “அல்லாஹ்வை அன்றி யாரையும் நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய நாளின் தண்டனையை பயப்படுகின்றேன்.”