குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨௦
Qur'an Surah Al-Ahqaf Verse 20
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِۗ اَذْهَبْتُمْ طَيِّبٰتِكُمْ فِيْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَاۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ࣖ (الأحقاف : ٤٦)
- wayawma yuʿ'raḍu
- وَيَوْمَ يُعْرَضُ
- And (the) Day will be exposed
- சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieved
- நிராகரிப்பாளர்கள்
- ʿalā l-nāri
- عَلَى ٱلنَّارِ
- to the Fire
- நரகத்தின் முன்
- adhhabtum
- أَذْهَبْتُمْ
- "You exhausted
- நீங்கள் போக்கிக் கொண்டீர்கள்
- ṭayyibātikum
- طَيِّبَٰتِكُمْ
- your good things
- உங்கள் நன்மைகளை
- fī ḥayātikumu
- فِى حَيَاتِكُمُ
- in your life
- உங்கள் வாழ்க்கையிலே
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (of) the world
- உலக
- wa-is'tamtaʿtum
- وَٱسْتَمْتَعْتُم
- and you took your pleasures
- இன்னும் இன்பம் அடைந்தீர்கள்
- bihā
- بِهَا
- therein
- அவற்றின் மூலம்
- fal-yawma
- فَٱلْيَوْمَ
- So today
- ஆகவே இன்றைய தினம்
- tuj'zawna
- تُجْزَوْنَ
- you will be recompensed
- கூலியாக கொடுக்கப்படுவீர்கள்
- ʿadhāba
- عَذَابَ
- (with) a punishment
- தண்டனையை
- l-hūni
- ٱلْهُونِ
- humiliating
- கேவலமான
- bimā kuntum
- بِمَا كُنتُمْ
- because you were
- நீங்கள் இருந்த காரணத்தாலும்
- tastakbirūna
- تَسْتَكْبِرُونَ
- arrogant
- நீங்கள் பெருமையடிப்பவர்களாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- bighayri l-ḥaqi
- بِغَيْرِ ٱلْحَقِّ
- without [the] right
- அநியாயமாக
- wabimā kuntum
- وَبِمَا كُنتُمْ
- and because you were
- நீங்கள் இருந்த காரணத்தாலும்
- tafsuqūna
- تَفْسُقُونَ
- defiantly disobedient"
- நீங்கள் பாவம் செய்பவர்களாக
Transliteration:
Wa Yawma yu'radul lazeena kafaroo 'alan Naai azhabtum taiyibaatikum fee hayaatikumud dunyaa wastam ta'tum bihaa fal Yawma tujzawna 'azaabal hooni bimaa kuntum tastakbiroona fil ardi bighairil haqqi wa bimaa kuntum tafsuqoon(QS. al-ʾAḥq̈āf:20)
English Sahih International:
And the Day those who disbelieved are exposed to the Fire [it will be said], "You exhausted your pleasures during your worldly life and enjoyed them, so this Day you will be awarded the punishment of [extreme] humiliation because you were arrogant upon the earth without right and because you were defiantly disobedient." (QS. Al-Ahqaf, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
நிராகரிப்பவர்களை நரகத்தின் முன்கொண்டு வரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) "நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவைகளை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்களுடைய சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்" (என்று கூறப்படும்). (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨௦)
Jan Trust Foundation
அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரிப்பாளர்கள் நரகின் முன் சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில், (அவர்களுக்கு கூறப்படும்:) “நீங்கள் உங்கள் நன்மைகளை உங்கள் உலக வாழ்க்கையிலே போக்கிக் கொண்டீர்கள் (அவற்றை அனுபவித்து முடித்து விட்டீர்கள்). அவற்றின் மூலம் (உலகத்தில்) இன்பம் அடைந்தீர்கள். ஆகவே, பூமியில் நீங்கள் அநியாயமாக பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் நீங்கள் பாவம் செய்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்றைய தினம் கேவலமான தண்டனையை கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்.”