குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௧௯
Qur'an Surah Al-Ahqaf Verse 19
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْاۚ وَلِيُوَفِّيَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (الأحقاف : ٤٦)
- walikullin
- وَلِكُلٍّ
- And for all
- எல்லோருக்கும்
- darajātun
- دَرَجَٰتٌ
- (are) degrees
- தகுதிகள் உண்டு
- mimmā ʿamilū
- مِّمَّا عَمِلُوا۟ۖ
- for what they did
- அவர்கள் செய்தவற்றின் அடிப்படையில்
- waliyuwaffiyahum
- وَلِيُوَفِّيَهُمْ
- and that He may fully compensate them
- இன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான்
- aʿmālahum
- أَعْمَٰلَهُمْ
- (for) their deeds
- அவர்களுடைய செயல்களுக்கு
- wahum
- وَهُمْ
- and they
- இன்னும் அவர்கள்
- lā yuẓ'lamūna
- لَا يُظْلَمُونَ
- will not be wronged will not be wronged
- அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
Transliteration:
Wa likullin darajaatum mimmaa 'amiloo wa liyuwaf fiyahum a'maalahum wa hum laa yuzlamoon(QS. al-ʾAḥq̈āf:19)
English Sahih International:
And for all there are degrees [of reward and punishment] for what they have done, and [it is] so that He may fully compensate them for their deeds, and they will not be wronged. (QS. Al-Ahqaf, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது. (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௧௯)
Jan Trust Foundation
அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இவர்கள்) எல்லோருக்கும் அவர்கள் செய்தவற்றின் (-அவர்களுடைய செயல்களின்) அடிப்படையில் தகுதிகள் உண்டு. இன்னும், இறுதியாக அவன் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான். இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.