Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௧௫

Qur'an Surah Al-Ahqaf Verse 15

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا ۗحَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ۗوَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ۗحَتّٰىٓ اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةًۙ قَالَ رَبِّ اَوْزِعْنِيْٓ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْٓ اَنْعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْۗ اِنِّيْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ (الأحقاف : ٤٦)

wawaṣṣaynā
وَوَصَّيْنَا
And We have enjoined
நாம் உபதேசித்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
(on) man
மனிதனுக்கு
biwālidayhi
بِوَٰلِدَيْهِ
to his parents
தன் பெற்றோருக்கு
iḥ'sānan
إِحْسَٰنًاۖ
kindness
நன்மை செய்வதற்கு
ḥamalathu
حَمَلَتْهُ
Carried him
அவனை சுமந்தாள்
ummuhu
أُمُّهُۥ
his mother
அவனது தாய்
kur'han
كُرْهًا
(with) hardship
சிரமத்துடன்
wawaḍaʿathu
وَوَضَعَتْهُ
and gave birth to him
இன்னும் அவனை ஈன்றெடுத்தாள்
kur'han
كُرْهًاۖ
(with) hardship
சிரமத்துடன்
waḥamluhu
وَحَمْلُهُۥ
And (the) bearing of him
அவனை சுமந்ததும்
wafiṣāluhu
وَفِصَٰلُهُۥ
and (the) weaning of him
இன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும்
thalāthūna
ثَلَٰثُونَ
(is) thirty
முப்பது
shahran
شَهْرًاۚ
month(s)
மாதங்களாகும்
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā balagha
إِذَا بَلَغَ
when he reaches
அவன் அடைந்து (விட்டால்)
ashuddahu
أَشُدَّهُۥ
his maturity
தனது வாலிபத்தை
wabalagha
وَبَلَغَ
and reaches
இன்னும் அடைந்து(விட்டால்)
arbaʿīna
أَرْبَعِينَ
forty
நாற்பது
sanatan
سَنَةً
year(s)
வயதை
qāla
قَالَ
he says
அவன் கூறுகிறான்
rabbi
رَبِّ
"My Lord
என் இறைவா
awziʿ'nī
أَوْزِعْنِىٓ
grant me (the) power
என்னை தூண்டுவாயாக
an ashkura
أَنْ أَشْكُرَ
that I may be grateful
நான் நன்றி செலுத்துவதற்கு(ம்)
niʿ'mataka
نِعْمَتَكَ
(for) Your favor
உனது அருளுக்கு
allatī
ٱلَّتِىٓ
which
எது
anʿamta
أَنْعَمْتَ
You have bestowed
நீ அருள் புரிந்தாய்
ʿalayya
عَلَىَّ
upon me
என்மீது(ம்)
waʿalā
وَعَلَىٰ
and upon
மீதும்
wālidayya
وَٰلِدَىَّ
my parents
என் பெற்றோர்
wa-an aʿmala
وَأَنْ أَعْمَلَ
and that I do
நான் செய்வதற்கும்
ṣāliḥan
صَٰلِحًا
righteous (deeds)
நல்ல அமலை
tarḍāhu
تَرْضَىٰهُ
which please You
அதை நீ திருப்திபடுகின்றாய்
wa-aṣliḥ
وَأَصْلِحْ
and make righteous
இன்னும் சீர்திருத்தம் செய்
لِى
for me
எனக்கு
fī dhurriyyatī
فِى ذُرِّيَّتِىٓۖ
among my offspring
என் சந்ததியில்
innī
إِنِّى
indeed
நிச்சயமாக நான்
tub'tu
تُبْتُ
I turn
திரும்பி விட்டேன்
ilayka
إِلَيْكَ
to You
உன் பக்கம்
wa-innī
وَإِنِّى
and indeed I am
இன்னும் நிச்சயமாக நான்
mina l-mus'limīna
مِنَ ٱلْمُسْلِمِينَ
of those who submit"
முஸ்லிம்களில் ஒருவனாவேன்

Transliteration:

Wa wassainal insaana biwaalidaihi ihsaanan hamalathu ummuhoo kurhanw-wa wada'athu kurhanw wa hamluhoo wa fisaaluhoo salaasoona shahraa; hattaaa izaa balagha ashuddahoo wa balagho arba'eena sanatan qaala Rabbi aqzi'neee an ashkura ni'matakal lateee an'amta 'alaiya wa 'alaa waalidaiya wa an a'mala saalihan tardaahu wa aslih lee fee zurriyyatee innee tubtu ilaika wa innee minal muslimeen (QS. al-ʾAḥq̈āf:15)

English Sahih International:

And We have enjoined upon man, to his parents, good treatment. His mother carried him with hardship and gave birth to him with hardship, and his gestation and weaning [period] is thirty months. [He grows] until, when he reaches maturity and reaches [the age of] forty years, he says, "My Lord, enable me to be grateful for Your favor which You have bestowed upon me and upon my parents and to work righteousness of which You will approve and make righteous for me my offspring. Indeed, I have repented to You, and indeed, I am of the Muslims." (QS. Al-Ahqaf, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்" என்று கூறுவான். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௧௫)

Jan Trust Foundation

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்| “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதனுக்கு நாம் உபதேசித்தோம்: - “தன் பெற்றோருக்கு நன்மை செய்வதற்கு.” அவனது தாய் அவனை சிரமத்துடன் (வயிற்றில்) சுமந்தாள். சிரமத்துடன் அவனை ஈன்றெடுத்தாள். அவனை (அவள்) சுமந்ததும் அவனுக்கு (அவள்) பால் குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். இறுதியாக, அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது வயதை அடைந்தால் அவன் கூறுகிறான்: என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள் புரிந்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ திருப்திபடுகின்ற நல்ல அமலை நான் செய்வதற்கும் என்னைத்தூண்டுவாயாக! என் சந்ததியில் எனக்கு சீர்திருத்தம் செய்! நிச்சயமாக நான் உன் பக்கம் திரும்பிவிட்டேன். நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாவேன்.