குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௧௨
Qur'an Surah Al-Ahqaf Verse 12
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً ۗوَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنْذِرَ الَّذِيْنَ ظَلَمُوْا ۖوَبُشْرٰى لِلْمُحْسِنِيْنَ (الأحقاف : ٤٦)
- wamin qablihi
- وَمِن قَبْلِهِۦ
- And before it And before it
- இதற்கு முன்னர்
- kitābu mūsā
- كِتَٰبُ مُوسَىٰٓ
- (was the) Scripture (of) Musa
- மூஸாவின் வேதம்
- imāman
- إِمَامًا
- (as) a guide
- ஒரு முன்னோடியாக(வும்)
- waraḥmatan
- وَرَحْمَةًۚ
- and a mercy
- அருளாகவும்
- wahādhā
- وَهَٰذَا
- And this
- இதுவோ
- kitābun
- كِتَٰبٌ
- (is) a Book
- ஒரு வேதமாகும்
- muṣaddiqun
- مُّصَدِّقٌ
- confirming
- மெய்ப்பிக்கக்கூடிய(து)
- lisānan ʿarabiyyan
- لِّسَانًا عَرَبِيًّا
- (in) language Arabic
- அரபி மொழியில்
- liyundhira
- لِّيُنذِرَ
- to warn
- எச்சரிப்பதற்காக(வும்)
- alladhīna ẓalamū
- ٱلَّذِينَ ظَلَمُوا۟
- those who do wrong
- அநியாயக்காரர்களை
- wabush'rā
- وَبُشْرَىٰ
- and (as) a glad tidings
- நற்செய்தியாகவும்
- lil'muḥ'sinīna
- لِلْمُحْسِنِينَ
- for the good-doers
- நல்லவர்களுக்கு
Transliteration:
Wa min qablihee kitaabu Moosaaa imaamanw-wa rahmah; wa haazaa Kitaabum musad diqul lisaanan 'Arabiyyal liyunziral lazeena zalamoo wa bushraa lilmuhsineen(QS. al-ʾAḥq̈āf:12)
English Sahih International:
And before it was the scripture of Moses to lead and as a mercy. And this is a confirming Book in an Arabic tongue to warn those who have wronged and as good tidings to the doers of good. (QS. Al-Ahqaf, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதனை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கின்றது. அன்றி, அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கின்றது. (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௧௨)
Jan Trust Foundation
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்கு முன்னர் மூசாவின் வேதம் ஒரு முன்னோடியாகவும் அருளாகவும் இருக்கின்றது. (அதையும் நாம்தான் இறக்கினோம்.) இதுவோ (முந்திய வேதங்களை) மெய்ப்பிக்கக்கூடிய அரபி மொழியில் உள்ள ஒரு வேதமாகும், அநியாயக்காரர்களை எச்சரிப்பதற்காகவும் நல்லவர்களுக்கு நற்செய்தியாகவும் (இதையும் நாம்தான் இறக்கினோம்).